Sathish Speaks

Blog

Passive income plan – Earn ₹1.6 lakh/month with ₹100 daily investment.

தினசரி ரூ.100 முதலீட்டின் மூலம் மாதம் ரூ.1.6 லட்சம்: பலே பாஸிவ் வருமானத் திட்டம்!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ இந்தியாவில் முதலீட்டின் மீதான ஆர்வம் என்பது கொரோனாவின் பாதிப்புக்கு பிறகு கணிசமாக உயர்ந்துள்ளது எனலாம். அதிலும் பாஸிவ் இன்கம் (Passive Income) என கூறப்படும் இரண்டாவது  செயலற்ற வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் பலரும் தாங்கள் வாங்கும் சம்பளமே  மாதம் 20,000 – 30,000 ரூபாய் தான். ஆக இதில் எப்படி பெரிய அளவில் முதலீடு செய்ய முடியும்? மிகப் பெரிய தொகுப்பு நிதியை (Corpus) உருவாக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள் ஆனால்,  ஒருவர் குறைவான சம்பளம் வாங்கினாலும், சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டு முதலீடு செய்தால், நல்லதொரு வருமானம் பார்க்க முடியும். தினம் ரூ.100 முதலீடு…! ஒருவர் தினசரி 100 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம்  மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பென்ஷன் போன்ற ஒரு தொகையை பெற முடியும். ஆனால் அதை  சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். அதை தெரிந்து கொள்ளும் முன்பு பாஸிவ் இன்கம் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களின் உழைப்பு தொடர்ந்து  இல்லாமல், உங்களுக்கு கிடைக்க கூடிய கூடுதல் வருமானம் பாஸிவ் இன்கம் என கூறப்படுகிறது. அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, உங்களுக்காக பணிபுரிய வைப்பதாகும்.   உதாரணத்திற்கு உங்களிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் வீட்டின் மூலம் கிடைக்கும் வாடகை, முதலீடு மூலம் கிடைக்கும் வட்டி / வருமானம் பாஸிவ் இன்கம் எனப்படுகிறது.  எனினும்  வாடகை வருமானம் என்பது பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் முதலீட்டின் மூலம் இரண்டாவது வருமானத்தை அனைவராலும் சுலபமாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஓய்வு காலத்தில் பென்ஷன் போல் மாத வருமானம் கிடைக்கும் வகையில் கூட வழிவகை செய்து கொள்ள முடியும். வயதான காலகட்டத்தில் எந்த உழைப்பும் இல்லாமல் பென்ஷன் கிடைப்பதை போல மாத மாதம் வருமானம் கிடைத்தால், நிச்சயம் ஒருவரால் சந்தோஷமாக நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க முடியும். மாதா மாதம் பெரிய தொகை பென்ஷன் போல் கிடைக்க வேண்டுமெனில், அதற்கு சிறந்த முதலீட்டு வழிமுறை எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Plan) ஆகும். இந்த முறையில் சிறிய தொகையை தொடர்ந்து நீண்ட காலத்துக்கு  முதலீடு செய்து வருவதன் மூலம் மிகப் பெரிய  தொகுப்பு தொகையை உருவாக்க முடியும்.  தினசரி 100 ரூபாய் வீதம்  அதாவது 30 நாள்களுக்கு மாதம் 3,000 ரூபாய் என்பது எல்லோராலும் முதலீடு செய்யக்கூடிய தொகைதான். பொதுவாக, எஸ்ஐபி முதலீட்டு முறை என்பதை சாதாரணமாக மற்ற முதலீடுகளை போல் தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் எஸ்ஐபி முறை மூலம் நினைத்து பார்க்க முடியாத  பெரிய தொகுப்பு நிதி சேர்க்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு கல்வி செலவு என தொடர்ந்து பல செலவுகளை செய்து வரும் தந்தை, மூன்றாவது குழந்தையும் இருக்கிறது என்று நினைத்து  தொடர்ந்து எஸ்,ஐ,பி முதலீட்டை  அவரது பணி ஓய்வுக் காலத்துக்கு என செய்து வர வேண்டும். உங்கள்  பிள்ளைகள் வளர்ந்து நல்ல வேலைக்கு செல்லும் வரையில், தந்தையின் உதவி என்பது இருக்கும். அதே சமயம் மூன்றாவது எஸ்.ஐ.பி குழந்தையும் உங்கள் குழந்தைகளை போல வளர்ந்து வரும். இது ஒரு காலகட்டத்தில் தனித்து நின்று ஓய்வுக் காலத்தை கழிக்க பயனுள்ள ஒன்றாக இருக்கும். அதன் மூலம் அதிக தொகுப்பு நிதியை சேர்க்கலாம். ஆக நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியமானது. குறைந்த தொகையானாலும் இளமை காலத்தில் இருந்து முதலீடு செய்வது அவசியமானது. இன்றும் பலருக்கும் இருக்கும் கெட்ட பழக்கம் என்னவெனில், முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பர். முதலீட்டு ஆலோசகர்களை கூட அணுகுவர். தேவையான விவரங்களை தெரிந்து கொள்வர். ஆனால் முதலீட்டை தொடங்க மாட்டார்கள். மாறாக காலம் மட்டுமே கடந்து கொண்டு இருக்கும். ஆனால் காலத்தோடு உங்களுக்கான சுமையும் அதிகரித்து கொண்டே செல்வதை புரிந்து, உடனடியாக முதலீட்டைத் தொடங்குவது பயனுள்ள ஒன்றாக இருக்கும். எதில் முதலீடு செய்யலாம்? இந்தியாவின் பொருளாதாரம் என்பது சர்வதேச நாடுகளை காட்டிலும் வலுவான பாதையில் சென்று கொண்டுள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தையிலும் வலுவான போக்கே காணப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டில் 40% வருமானத்தையும், 2022ல் 40% வருமானத்தையும். 2023ல் 40% வருமானத்தையும் தொடர்ந்து கொடுத்துள்ள பல நிறுவனப் பங்குகள் உள்ளன. பல பங்குச் சந்தை சார்ந்த ஃஃபண்ட்கள் ஆண்டுக்கு சராசரியாக 20-25 சதவிகித வருமானத்தை காண முடிகிறது. இந்த வருமானம் எதிர்காலத்தில் உத்தரவாதம் இல்லை என்றாலும் ஆண்டுக்கு சராசரியாக 12%க்கு மேல் வருமானத்தை சாதாரணமாக எதிர்பார்க்கலாம்.  கடந்த 2002 – 2007 வரையிலான காலகட்டம் என்பது மிக சிறப்பான வருடமாக இருந்து வந்தது. அதேபோன்று தற்போதைய 2024-2029  சூழலும் மாற வாய்ப்பிருக்கிறது. ஆக நீங்கள் மாதம் மாதம் முதலீடு செய்ய நினைக்கும் 3,000 ரூபாயை சிறப்பான நல்ல வருமானம் கிடைக்க கூடிய,  பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.  நீங்கள் செய்யும் 3000 ரூபாய் என்பதோடு நிறுத்தாமல், சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்திற்கு வருடம்  முதலீட்டுத் தொகையை 10% அதிகரிக்க வேண்டும். இது மேற்கொண்டு தொகுப்பு நிதியை கணிமாக அதிகரிக்க  பயனளிக்கும். இங்கே மாதம் ரூ.30,000 சம்பளம் வாங்கும் ஒருவர், அதில் 10% தொகையை அதாவது ரூ.3,000-ஐ அவரின் பணி ஓய்வுக் கால தொகுப்பு நிதிக்காக முதலீடு செய்வதாக வைத்துகொள்வோம். தொகுப்பு நிதி எவ்வளவு கிடைக்கும்? இந்தியாவின் முதன்மையான பங்குச் சந்தையான பாம்பே பங்குச் சந்தையான பி.எஸ்.இ-ன் சென்செக்ஸ் குறியீடு கடந்த1979-ம் ஆண்டில் தொடங்கியது. சென்செக்ஸ் கடந்த 44 வருடங்களில் கொடுத்த வருமானம் என பார்க்கும்போது 15.5% கிடைத்துள்ளது. இந்த விகிதம் இல்லாவிட்டாலும் கூட 12% வருமானத்தை கணக்கிட்டால் கூட, உங்கள் முதலீட்டின் முதிர்வு தொகை என்பது  2.4 கோடி ரூபாயாக இருக்கும். அது எப்படி என பார்ப்போம்.  மாத ஆரம்ப முதலீடு: ரூ.3,000 ஆண்டுக்கு முதலீட்டுத் தொகை அதிகரிப்பு: 10% முதலீட்டு காலம்:  30 ஆண்டுகள் வருமானம் எதிர்பார்ப்பு:  ஆண்டுக்கு 12% மொத்த முதலீட்டு தொகை: ரூ.59.22 லட்சம் 30 ஆண்டு இறுதியில் தொகுப்பு நிதி: ரூ.2.4 கோடி மாத வருமானம் எப்படி? மேற்கண்ட 2.4 கோடி ரூபாய் கார்ப்ஸ்-க்கு ஆண்டுக்கு 8% வருமானம் கிடைத்தால் கூட வருடத்திற்கு, ரூ.19.2 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதை மாத மாதம் பிரிக்கும்போது 1.6 லட்சம் ரூபாய் என்பதை எளிதாக பெற முடியும்.  தினம் ஆக சரியான திட்டமிடலுடன், தொடர்ச்சியாக முதலீடு செய்வதன் மூலம் ஓய்வுக் காலத்தை நிதி ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் எளிதாக கடக்க முடியும். இன்றைய காலக்கட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு வங்கிகளில் வைப்பு நிதிகளுக்கு சிறப்பு சலுகைகள், கூடுதல் வட்டி கிடைக்கிறது. ஆக அதை  தொகுப்பு நிதியை முதலீடு செய்து நல்ல வருமானம் பெற பயன்படுத்திக் கொள்ளலாம். ஓய்வு காலத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? இன்றே உங்கள் சம்பளத்தில் குறைந்தபட்சம் 10% தொகையாவது முதலீடு செய்ய திட்டமிடுங்கள்..! #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

தினசரி ரூ.100 முதலீட்டின் மூலம் மாதம் ரூ.1.6 லட்சம்: பலே பாஸிவ் வருமானத் திட்டம்! Read More »

A person using a credit card wisely for online shopping and payments

கிரெடிட் கார்டு: சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி?

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ கிரெடிட் கார்டு பலருக்கும் வரப்பிரசாதமாக இருந்தாலும், அதனால் பயன் அடைந்தவர்களை காட்டிலும், சரியாக பயன்படுத்த தெரியாமல் பல சிக்கல்களை சந்தித்தவர்கள் தான் அதிகம். ஆரம்ப காலத்தில் கிரெடிட் கார்டு மிக கவர்ச்சிகரமான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், பின்னர் அதை தலையை சுற்றி வீசிய இடம் தெரியாமல் செல்பவர்கள் தான் அதிகம். அந்தளவுக்கு அதன் மூலம்  பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படி எனில் கிரெடிட் வாங்கவே கூடாதா?  அப்படி எல்லாம் இல்லை. அதை சரியான முறையில் பயன்படுத்துவதில்தான் சூட்சுமம் இருக்கிறது அதை பற்றி தெரிந்து கொள்வோம். அவசர நிதி..! கிரெடிட் கார்டுகளை பொறுத்த வரையில் அவசர நிதி போல வைத்திருப்பது மிக அவசியம். ஏதேனும் தவிர்க்க முடியாத காலகட்டத்தில் அவசர தேவைக்காக கையில் காசு இல்லாத சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதுவும் அந்தத் தொகையை சுமார் 45-50 நாள்களில் மொத்தமாக திரும்பக் கட்டும் தகுதி இருக்கும்பட்சத்தில் மட்டும்தான். ஆனால் முதல் முறையாக பயன்படுத்துபவர்கள் பலரும் அதை சரியாக பயன்படுத்த தெரியாமல், இஷ்டத்திற்கு பயன்படுத்தி விட்டு பின்னர் கஷ்டப்படுகிறார்கள். அவசர தேவையை தாண்டி தேவையில்லாத செலவுகள்…! குறிப்பாக இளைஞர்கள் பலரும் புதிதாக வேலைக்கு சேர்ந்த பின்னர்,  ஓரிரு மாதங்கள் சம்பளம் வாங்கிய பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தாங்களாகவே முன் வந்து கிரெடிட் கார்டுகளை கொடுக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் வைத்திருக்கும் இளைஞர்கள் அவசர தேவையை தாண்டி தேவையில்லாத விஷயங்களுக்கும் கார்டை பயன்படுத்த தொடங்குகிறார்கள். பியர் பிரஷர்..! இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை பியர் பிரஷர் (Peer Pressure) ஆகும். உறவினர்கள், நண்பர்கள் அல்லது நம்முடன் பணிபுரிபவர்களை கவரவும், அவர்களிடம் தங்களை மதிப்பு மிக்கவராக காட்டிக் கொள்ளவும் நினைப்பதுதான். அதற்காக அவர்களை போலவே இருக்க விரும்புகிறார்கள். உதாரணத்திற்கு அவர்களை போலவே விலை உயர்ந்த பிராண்ட் ஆடைகள், ஸ்மார்ட்போன், போன்றவற்றை வாங்க நினைக்கின்றனர். அதற்காக கையில் பணம் இல்லாவிட்டாலும் கூட, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் உடனடியாக வாங்குகின்றனர்.  திட்டமிடாமல் செலவு செய்தல்..! (spontaneous purchase) ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு அதை போல, உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா செல்லுதல்ன அத்தியாவசியம் அல்லாத தேவைகளுக்கு, எதைப்பற்றியும் யோசிக்காமல் மற்றவர்களை போல நாமும் இருக்க வேண்டும் என நினைத்து கண்டபடி செலவு செய்கிறார்கள். அதற்காக செலவு செய்ய காசில்லாமல் போனாலும் கூட, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குகின்றனர். இதுவும் கிரெடிட் கார்டில் பலரும் செய்யும் தவறுகளில், கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. குறைந்தபட்ச தொகையை செலுத்துதல்: கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, பயன்படுத்திய தொகையில் குறைந்தபட்ச தொகையை (Minimum Due) செலுத்துவது ஆகும். பலரும் அது தெரியாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.  உதாரணத்திற்கு 50,000 ரூபாய் செலவு செய்திருப்பார்கள். கையில் 15,000 ரூபாய் தான் இருக்கிறது என செலுத்த வேண்டிய நேரத்தில் வெறும் 15,000 ரூபாயை மட்டுமே செலுத்துவர். இது மிக தவறான ஒரு விஷயம்.  இது அதிக வட்டி விகிதங்களுக்கு வழிவகுக்கலாம். பொதுவாக, கிரெடிட் கார்டுகளுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ண்டுக்கு 35 – 45% வட்டி வசூலிக்கின்றன; இதனால், எதிர்காலத்தில் மிகப்பெரிய தொகையை செலுத்த வழிவகுக்கலாம். ஆக கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், அதன் பில்லை ஒரே சமயத்தில் மொத்த நிலுவையை செலுத்த திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இன்னும் சிலர் ஒரு கார்டில் இருந்து, இன்னொரு கார்டுக்கு தொகை அனுப்பி அதன் மூலம் நிலுவையை செலுத்துகிறார்கள். இப்படி பணம் அனுப்பும் போது, அதற்கு தனியே சில நூறு ரூபாய்கள் கட்டணம் இருக்கிறது; மேலும். வட்டியில்லாத சலுகை காலம் எல்லாம் கிடையாது. எப்போது பணம் மாற்றப்பட்டதோ அப்போதிலிருந்தே 35-45% வட்டி போட ஆரம்பித்து விடுவார்கள். மேலும், கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்தாலும் அதற்கு கட்டணம் இருக்கிறது. இதிலும் வட்டி இல்லாத சலுகை காலம் கிடையாது. எனவே, பணமாக மாற்றுவது, பணம் எடுப்பதை தவிர்ப்பது தவிர்ப்பது நல்லது. பொதுவாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது மிக பொறுப்புடன் இருப்பது மிக அவசியம். இது உங்கள் நிதி செயல்பாட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். வங்கிகளை பொறுத்த வரையில் தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகன கடன்-ஐ காட்டிலும் கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன. ஆக அதை கவனத்தில் கொண்டு செயல்படுவது அவசியம். மேற்கண்ட முக்கிய தவறுகளை தவிர்த்தாலே கிரெடிட் கார்டை மிக பயனுள்ள வகையில் மாற்றிக் கொள்ள முடியும். அப்படி செய்யும் பட்சத்தில் அவற்றை அவசர தேவைக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். சரியான முறையில் பயன்படுத்தும் போது ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும். இதன் மூலம் ஒரு சில வருடங்களில் கணிசமான ஊக்கத் தொகையையும் பெற முடியும். தொடர்ந்து கிரெடிட் கார்டை சரியான முறையில் பயன்படுத்தும் போது, கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் பயனுள்ள வகையில் பல சலுகைகளை கொடுக்கின்றன. ஆக அவற்றையும் சரியான முறையில் பயன்படுத்தி பலன் அடைய முடியும். மொத்தத்தில் கிரெடிட் கார்டு ஒரு வரப்பிரசாதமே. அதை சரியான முறையில் பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை. அதோடு ஒருவர் ஒரு கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.  #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

கிரெடிட் கார்டு: சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி? Read More »

A comparison of Blue Chip and Penny Stocks to help investors choose the best option for their investment strategy.

ப்ளூ சிப் Vs பென்னி பங்குகள்: முதலீட்டுக்கு எது சிறந்தது?

எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் முதலீடு செய்தாலும், ப்ளூ சிப் பங்குகள் (Blue Chip Stocks)  அல்லது பென்னி பங்குகள் (Penny stocks)  இவ்விரண்டில் எது சிறந்தது? எதில் முதலீடு செய்யலாம் என கேட்டால், பெரும்பாலும் ப்ளூ சிப் பங்குகளையே தேர்வு செய்வார்கள். ஏனெனில் ப்ளூ சிப் பங்குகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலுவான நம்பகத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாக நம்புகின்றனர். ப்ளூ சிப் பங்குகளை காட்டிலும் குறைந்த விலையில் இருந்தாலும் பென்னி பங்குகள், ரிஸ்க் ஆனவையாக பார்க்கப்படுகின்றன. குறைந்த விலையில் இருந்தாலும் எல்லா பென்னி பங்குகளும் ரிஸ்க்கானவை அல்ல. அதேபோல நல்ல விலையில் உச்சத்தில் இருந்தாலும் ப்ளூ சிப் பங்குகள் அனைத்தும் சிறப்பானவை என்று கூறி விட முடியாது. அப்படி எனில் இவ்விரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி எழும். இதை தெரிந்து கொள்ளும் முன்பு பென்னி பங்குகள் என்றால் என்ன? ப்ளூ சிப் பங்குகள் என்றால் என்ன? என தெரிந்து கொள்ளலாம். பென்னி பங்குகள்: பென்னி பங்குகள் என்பது மிக குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளாகும். இவற்றின் விலை பெரும்பாலும் ஓரிரு இலக்கத்தில் (உதாரணம் ரூ.8, ரூ.40) இருக்கும். பொதுவாக இதுபோன்ற பங்குகளின் விலை 50 ரூபாய்க்கு கீழே இருக்கும். அதன் விலையில் சில நேரங்களில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம்  இருக்கும். இதில் இரண்டு வகையான பங்குகள் உள்ளன. 1.ரைசிங் ஸ்டாக்ஸ் (Rising Stocks) 2. ஃபால் & ஜியாண்ட்ஸ் (Fall & Giants) ரைசிங் ஸ்டாக்ஸ்: இந்த வகையான பங்குகள் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வருமானம் ஏதும் கொடுக்காது; பெரிய அளவில் ஏற்றம் காணாது. எனினும் இதன் வணிக அடிப்படை என்பது வலுவாக இருக்கும்.  எதிர்காலத்தில் வளர்ச்சி காணக் கூடியதாக இருக்கலாம். ஆக இதன் பங்கு விலை என்பது நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் கொடுக்கும் பங்குகளாக இருக்கும். உதாரணத்திற்கு டாடா குழுமத்தின் டைட்டன் பங்கை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பங்கின் விலை கடந்த 2005-ம் ஆண்டில் வெறும் 25 ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது 3,400 ரூபாய்க்கு மேல் வர்த்தமாகி வருகிறது. இது பல முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய லாபத்தை அள்ளி கொடுத்திருக்கிறது எனலாம். ஆக ரைசிங் பென்னி பங்குகள் லாபம் கொடுக்கலாம் என்றாலும், நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். ஃபால் & ஜியாண்ட்ஸ்: இந்த வகையான நிறுவனங்கள் மிகப் பெரிய பிரபலமான நிறுவனங்களாக இருந்திருக்கலாம். இவற்றின் பங்கு விலையும் உச்சத்தில் இருந்திருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது பிரச்சனையால் மிக மோசமான சரிவை சந்தித்து இருக்கலாம். உதாரணத்திற்கு சுஸ்லான், வோடபோன், யெஸ் பேங்க் என பல பங்குகள் எடுத்துக் கொள்ளலாம். யெஸ் பேங்க், பங்கு 2018-ம் ஆண்டில் 375 ரூபாய் என்ற நிலையில் காணப்பட்டது. இவ்வங்கி அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்திருந்தது. ஆனால் சரியான நேரத்தில் கடனை வசூலிக்க முடியாமல், நிதி ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் சரியான நிர்வாகம் இல்லை என்று, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன் பிறகு சரியத் தொடங்கிய இந்த வங்கியின் பங்கு விலை தற்போது 20 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. பலரும் இதுபோன்ற பங்குகளில் செய்யும் முதலீட்டுத் தவறு இப்பங்கானது மீண்டும் பழைய உச்சத்தை எட்டும் என வாங்கி போடுவது தான். ஆனால் இது மிக தவறான அணுகு முறையாகும். பொதுவாக,  இந்த பென்னி பங்குகளை பற்றிய தகவல்கள் பொது வெளியில் மிக குறைவாகவே கிடைக்கும். இதன் காரணமாக இந்தப் பங்குகள் விலை மீண்டும் பழைய உச்சத்தை தொடுமா? இல்லையா என்பதை எளிதில் கணிக்க முடியும். ஆனால், பென்னி பங்குகளில் இது மிக கடினம் ஆகும்.   ப்ளூ சிப் பங்குகள் என்றால் என்ன? பொதுவாக ப்ளூ சிப் பங்குகள் என்பது நீண்ட காலமாக முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து நல்ல லாபத்தை கொடுத்து வரலாம். பங்குச் சந்தையின் பெரும் சரிவு கால கட்டத்தில் அதிகமாக வீழ்ச்சி காணாது. ஒரு வேளை கணிசமான அளவு சரிவைக் கண்டாலும் கூட,  குறுகிய காலத்தில்  மீண்டும் ஏற்றம் காணலாம். மிக குறைந்த விலையில் பங்கு இருந்தாலும் கூட,  அது சார்ந்திருக்கும் நிறுவனம் நல்ல வணிகத்தை கொண்டிருக்கும். அதனால், நீண்ட காலத்தில்  தொடர்ந்து வருமானம் கொடுக்கும் பங்குகளாக இருக்கும். உதாரணத்திற்கு ஐ.டி.சி நிறுவனப் பங்கின் விலை ஆரம்பக் காலக் கட்டத்தில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. ஆனால் சமீபத்தில் இரு மடங்கு லாபத்தை பதிவு செய்துள்ளது. தற்போது ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கானது பெரியளவில் மாற்றமின்றி கடந்த 36 மாதங்களாக காணப்படுகிறது. எனினும் இந்தப் பங்கு எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்கும் பங்காக இருக்கலாம்.ப்ளூ சிப் நிறுவனங்கள் யாருடன் எல்லாம் வணிகம் செய்கிறார்கள். என்ன வணிகம்? அதன் மதிப்பு என்ன? வருமானம், நிகர லாபம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் விரிவாகவும் எளிதாகவும் கிடைக்கும். இதன் காரணமாக இந்தப் பங்குகள் விலை மீண்டும் பழைய உச்சத்தை தொடுமா? இல்லையா என்பதை எளிதில் கணிக்க முடியும். ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப..! ஒருவர் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க கூடிய  முதலீட்டாளர் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப ப்ளு சிப் பங்குகளா? பென்னி பங்குகளா என திட்டமிட வேண்டும். முதலில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் குறிப்பிட்ட தொகையை ரிஸ்க் ஓரளவுக்கு குறைவான பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறிப்பாக லார்ஜ் கேப் ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட்,ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்களில்  முதலீடு செய்யுங்கள். அதன் பிறகு ரிஸ்க் அதிகமான மிட் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்து அனுபவம் பெறுங்கள். அதன் பிறகு லார்ஜ் கேப் பங்கு, அதன் பிறகு மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யுங்கள்ல் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் ஃபண்ட்கள் மிக அதிக ரிஸ்கானவை என்பதால் அவை தவிர்க்க வேண்டியவையாகும். இப்படி நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்யும் முன் போதுமான அளவுக்கு அவசரக் கால நிதி, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு இருப்பது கட்டாயமாகும்.  தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருக்கும் நிலையில் 10% தொகையை எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்க கூடிய ரைசிங் ஸ்டாக்ஸ் போன்ற வலுவான அடிப்படையை கொண்ட பென்னி பங்குகளை தேர்வு செய்து வாங்கலாம். ஆக உங்களுடைய ரிஸ்க் விகிதம் எப்படி? என முழுமையாக தெரிந்து கொண்டு, உங்களுக்கு பென்னி பங்குகள் ஏற்றதா? ப்ளூ சிப் பங்குகள் ஏற்றதா? என தெரிந்து கொண்டு, சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்வது அவசியமாகும். 1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

ப்ளூ சிப் Vs பென்னி பங்குகள்: முதலீட்டுக்கு எது சிறந்தது? Read More »

Discover a secret income opportunity that can help you achieve financial freedom without a regular job.

இந்த வருமானசீக்ரெட்தெரிந்து கொண்டால் நீங்கள் வேலைக்கே போக வேண்டாம்..!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ நம்மில் எத்தனை பேர், நமக்கு பிடித்தமான, விரும்பி படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்கிறோம்? என்ற கேள்வியை கேட்டால் பலரும் இல்லை எனக் கூறுவதை தான் பார்க்க முடியும். தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு, பிடித்தமான வேலையை தேடி செல்லவும் தைரியம் இல்லை. ஏனெனில் அந்தளவுக்கு பலரிடம் நிதிச் சுதந்திரம் (Financial Freedom) என்பது கிடையாது. பொதுவாக, நிதிச் சுதந்திரம் என்பது நிதி ரீதியாக மட்டுமல்ல, வாழ்க்கைக்கான சுதந்திரமாகவும் உள்ளது. ஆக இதை சரியாக திட்டமிட்டு செயல்படுவது மிக அவசியமானது. நிதிச் சுதந்திரம் என்பது ஒருவர் எந்த ஒரு வேலை அல்லது தொழில் செய்யாமல் அவரின் நிதித் தேவைகளை அவரிடம் ஏற்கெனவே இருக்கும் செல்வங்களை கொண்டு நிறைவேற்றிக் கொள்வதாகும். குறிப்பாக நடுத்தர வருமானப் பிரிவினரின் இடையே இது குறித்த விழிப்புணர்வு என்பது மிக குறைவாக உள்ளது. நிதிச் சுதந்திரம் குறித்து நாம் கற்றுக் கொள்வதோடு, நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இது நிதியை மட்டும் அல்ல, நிதி ஒழுக்கத்தையும் வளர்க்கும். இப்படிப்பட்ட நிதிச் சுதந்திரத்தை அடையும் முக்கிய ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். தகுதி வளர்ச்சி..! பொதுவாக நிதிச் சுதந்திரத்தை அடைய முக்கிய தேவை வருமானம் / சம்பாத்தியம் மட்டுமே. இந்த வருமானத்தை அடைய முக்கிய வழி, நாம் செய்யும் வேலை ஆகும். பெரும்பாலானவர்கள் வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எத்தனை பேர் தேவைக்கு போதுமான அளவு நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறோம் என்றால், அதற்கு பலரும் இல்லை என்றுதான் கூறுவர். ஏதோ ஒன்று படித்தோமா? ஓரளவுக்கு சம்பளம் கிடைத்ததா? இப்படி தான் இருப்பார்கள். பெரிதாக சம்பள வளர்ச்சி இருக்காது? இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமெனில், நம்முடைய தகுதியை படிப்படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே அடுத்த கட்டத்திற்கு நம்மை கூட்டி செல்லும். ஒரு ஊழியர் மூலம் நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு வருமானம் கிடைக்கிறதோ? அந்த அளவிற்கு, நிறுவனம் ஊழியர்களை சிறப்பான சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள பார்க்கும். ஆக ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என இருக்காமல், மேலும் வளர்ச்சியை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சம்பளம் ஆண்டு தோறும் அதிகரித்து வரும். நிதிச் சுதந்திரம் அடைவதற்கான வழி உருவாகும். கடன் இல்லா வாழ்க்கை: பலரும் பணச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இந்த  விஷயங்களில் தான். பலரும் பெரிய பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளில் சென்று படிக்க வேண்டும் என்கிற மோகத்தில், வங்கிகளில் கடன் வாங்கி படிப்பார்கள். அதன்பிறகு அந்த கடனை  திரும்ப செலுத்த பல ஆண்டுகள் மாதத் தவணைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். திறமையானவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தாலும் நல்ல வேலை கிடைக்கும். அதேபோல் தான் வீடு என்பதும். சொந்தமாக வீடு கட்டுகிறோம் அல்லது சொகுசு வீடு வாங்குகிறோம் என்ற பெயரில், அதிக தொகை வீட்டு கடன் வாங்கி அதில் முடங்கி போகிறார்கள்.  இதன் காரணமாக அடுத்த 10 – 20 வருடங்களுக்கு தொடர்ந்து மாத தவணை  செலுத்த வேண்டி இருக்கும். அதன் பிறகு நிதிச் சுதந்திரம் என்பது இருக்காது. ஆக தகுதிக்கு மீறி கடன் வாங்கி பிறரை கவர வேண்டும் என்பதற்காக படிப்பது, சொகுசு வீடு கட்டுவதை/ வாங்குவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்யும் போது நிதிச் சுதந்திரத்தை விரைவில் அடைய முடியும். அவசர நிதித் தேவை ; எந்த நேரத்தில் எந்த நிதிப் பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இதில் முதலாவதாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், அவசர தேவைக்கு என எப்போதும் 6 மாத குடும்பச் செலவுக்கு தேவையான  தொகையை அவசரக் கால நிதியை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்.  உதாரணத்திற்கு கொரோனா காலகட்டத்தில் பலரும் தங்கள் வேலையை இழந்து பல மாதங்கள் மிக மோசமான நிதிச் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அந்த சமயத்தில் பலரும் கடன் வாங்கியும், தங்க நகை போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை விற்பனை செய்தும் சமாளித்தனர். ஆக இது போன்ற சூழலை எதிர்கொள்ள, எப்போதும் குறைந்தபட்சம் 6 மாத செலவு தொகையாவது அவசர நிதியாக சேமிப்பில் வைத்திருக்க வேண்டும். காப்பீடுகள் கட்டாயம்..! ஹெல்த் இன்ஷூன்ஸ் பாலிசி போதிய அளவுக்கு எடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில்  இது திடீர் விபத்து அல்லது திடீர் நோய் பாதிப்பு ஏற்படும் போது பெரிய மருத்துவச் செலவுகளை கடன் வாங்காமல் சுலபமாக சமாளிக்க உதவும். குடும்பத்திற்கு மொத்தமும் சேர்த்து  ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பதை போட்டு வைத்தால், யாருக்கு பெரிய மருத்துவச் செலவு எதிர்பாராத விதமாக ஏற்பட்டாலும் சமாளிக்க உதவும். நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் வருமான ஆதாரம் என்றால், கட்டாயம் டேர்ம் லைஃப்  இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். இது எதிர்பாராத விதமாக குடும்பத்தில் வருமானம் ஈட்ட கூடிய நபர் இல்லாவிட்டால்,  குடும்பத்தினருக்க்கு நிதி ரீதியாக பயனுள்ள ஒன்றாக இருக்கும். ரிஸ்க் & ரிவார்டு பெரும்பாலானவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், அந்தப் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்திருக்க மாட்டார்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாமல் குறைந்த வட்டி வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். அதையும் நீண்ட கால அடிப்படையில் திட்டமிட மாட்டார்கள். ஆக இது மிகப் பெரிய தொகுப்பு நிதி இலக்குகளை அடைய உதவாது. ஆக மிகப்பெரிய அளவில் தொகுப்பு நிதியை அடைய பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இவை நீண்ட கால அடிப்படையில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கொடுக்கும் ஒன்றாக அமையும். இதில் சற்று ரிஸ்க் அதிகம் என்றாலும், வருமானம் அதிகம்.  பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு நல்ல வருமானம் கிடைக்கிறது. பாஸிவ் இன்கம்: பலரும் காலை 10 மணிக்கு அலுவலகம் சென்றோமா? மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்தோமா? மாதம் குறிப்பிட்ட சம்பளம் வாங்கினோமா? என இருப்பார்கள். எதிர்பாராத சூழலில் ஒரு மாதம் வேலை செல்ல முடியவில்லை எனில், அவர்களின் வருமானம் என்பது இருக்காது; சிக்கல் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் உருவாகும். அதுவே வேலைக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் ஒரு கூடுதல் வருமானம் அல்லது இரண்டாவது வருமானம் என்பது வந்து கொண்டிருந்தால், அதனால் பெரும் தாக்கம் இருக்காது. ஆக உங்களுக்காக உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய விட வேண்டும். பாஸிவ் இன்கம் என கூறப்படும் செயலற்ற வருமானத்தை அடைய, சரியான திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம். மொத்தத்தில் இரண்டாவது வருமானம் என்பதை எப்போதும் திட்டமிட்டு இருக்க வேண்டும். கூடுதலாக உங்களுக்கு இருக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே கூடுதல் வருமானத்திற்கான வழியை உருவாக்கி கொடுக்கும். அந்த வருமானத்தை தொடர்ந்து பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருவது மூலம் பாஸிவ் வருமானத்தை பெற முடியும். ஓய்வு கால திட்டமிடல்: நல்ல வேலை, சிறப்பான சம்பளம், திறமை என இருந்தாலும், பலரும் அவர்களின் ஓய்வு காலத்தில் 60 வயதில் கூட வேலைக்கு செல்வதை காண முடிகிறது. அவர்கள் ஓய்வு காலத்திற்கு சரியான திட்டமிடலை செய்யாததே இதற்கு காரணம் எனலாம். ஆக உங்கள் சம்பளத்தில் நிச்சயம் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்து வர வேண்டும். இது வயதான காலகட்டத்தில் நிதிச் சுதந்திரத்துடன் இருக்க வழிவகுக்கும். உதாரணத்திற்கு தற்போதைய காலகட்டத்தில் உங்கள் செலவு மாதம் 50,000 ரூபாய் எனில், 12 மாதங்களுக்கு 6 லட்சம் ரூபாய் செலவு என்பது இருக்கும். உங்கள் பணி ஓய்வுக் கால தொகுப்பு நிதி என்பது உங்கள் தற்போதைய ஆண்டு  செலவை விட 25 மடங்கு இருக்க வேண்டும். ஆக உங்கள்  தொகுப்பு நிதி இலக்கு என்பது 1.5 கோடி ரூபாயாக இருக்கும். 1.5 கோடி ரூபாய் இலக்கு என்பது பெரியது என்றாலும் கூட அதை நீண்ட கால அடிப்படையில் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் எளிதாக சரியானதொரு தொகுப்பு நிதியை உருவாக்க முடியும். மேற்கண்ட 1.5  கோடி ரூபாய் தொகுப்பு நிதியில் மியூச்சுவல் ஃபண்ட் சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் ( SWP)  மூலம் ஆண்டுக்கு 4%  எடுத்தால் கூட,  மாதம் 50,000 ரூபாய் எடுத்து செலவு செய்ய முடியும். முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8% வருமானம் கிடைத்தால், செலவுக்கு பணம் எடுக்கப்பட்டது போக உங்கள் ஓய்வுக் கால தொகுப்பு நிதி தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். இதன் மூலம் பணி ஓய்வுக் காலத்திலும் ஒருவர் நிதிச் சுதந்திரத்துடன் இருக்க முடியும். கால சுதந்திரம்: ஒருவர் ஒரு விஷயத்தை செய்யும் போது அவர்களுக்கான கால அவகாசம் என்பது அதிக அளவில் இருக்கும், அதை சிறப்பாக செய்வார்கள். உதாரணத்திற்கு 5 வருடத்தில் உங்கள் ஓய்வு காலத்திற்கு போதிய தொகுப்பு நிதையை சேர்ப்பது என்பது கடினமாக இருக்கும். 25, 30 ஆண்டுகள் போன்ற நீண்ட கால அடிப்படையில் போதிய அவகாசம் இருந்து, அதன் மூலம் இலக்கை அடைவது மிக எளிதாக இருக்கும். ஆக கால சுதந்திரம் (Time Freedom) என்பது எந்த அளவுக்கு அதிகம் இருக்கிறதோ? அந்தளவுக்கு மிக எளிதாக நிதிச் சுதந்திரத்தை எட்ட முடியும். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமெனில் இளம் வயதில் இருந்தே முதலீடு செய்ய ஆரம்பிப்பது என்பது உங்கள் நிதிச் சுதந்திரத்திற்கு முக்கியம் எனலாம். 1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

இந்த வருமானசீக்ரெட்தெரிந்து கொண்டால் நீங்கள் வேலைக்கே போக வேண்டாம்..! Read More »

7 financial mistakes to avoid for better wealth growth.

கண்டிப்பாக இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள்:   உங்கள் செல்வத்தின்மதிப்பு அதிகரிக்க சூப்பர்  டிப்ஸ்!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ ஒரு சரியான நிதி திட்டமிடலை உருவாக்குவது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு  அந்த நாம் செய்யும் சில தவறுகளையும் மாற்றிக் கொள்வதாகும்.  அது மிகப் பெரிய நிதி இலக்குகளை (Finance Goals) கூட எளிதில் அடைய உதவிகரமாக இருக்கும். தவறுகளை திருந்தி கொள்வது உங்கள் செல்வத்தின் (Wealth) மதிப்பை அதிகரிக்க மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். பெரும்பாலான மக்கள் இன்றைய காலகட்டத்தில் தங்கள் நிதியை சரியாக நிர்வகிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களை அறியாமலேயே சில தவறுகள் செய்கின்றனர். இது அவர்களையும் அறியாமல் அவர்களின்  செல்வத்தின்  மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தவறுகளை சரி செய்து கொண்டாலே, பணத்தை சரியாக  நிர்வகிக்க முடியும்.  பொதுவாக, பலரும் செய்யும்  ஏழு  முக்கிய தவறுகள் பற்றி பார்ப்போம். 1 சமூக அஸ்தஸ்துக்காக அதிக செலவு..! இன்றைய கால கட்டத்தில் பலரும் செய்யும் தவறுகளில் முக்கியமான ஒன்று, சமூகத்தில் தங்கள் அஸ்தஸ்து உயர்த்தி காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதாகும்.  தாங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் தொடங்கி, கார் வரையில் மிக விலை உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்; மற்றவர்கள் மதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தங்களின் நிதி தகுதிக்கு மீறி அதிக செலவு செய்கிறார்கள். இதை தவிர்த்து தங்கள் தேவை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப  வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். யாரோ  நண்பர், உறவினர்கள் விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அதிக விலை கொடுத்து நாமும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது பலரும் செய்யும் மிக முக்கியமான தவறுகளில் ஒன்று. 2 வெளி உணவுகளை தவிர்த்தல்..! இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே மிக வேகமாக பரவி வரும் ஒரு மோசமான பழக்க வழக்கங்களில் ஒன்று,பெரும்பாலும் வெளி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாகும்.சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வரும் வித விதமான உணவகங்களே  இதற்கு சாட்சி. கடையில் சாப்பிடுவது என்பது மக்களின்  அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி விட்டது எனலாம். இன்றைய நடுத்தர குடும்பங்கள் தொடங்கி,பணக்கார குடும்பங்களில் வரையில் தவிர்க்க வேண்டிய இந்த வழக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது குடும்ப செலவில் பணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்கும். உடல் நலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளியில் ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதை குறைந்துக் கொண்டாலே நம்மால் மிகப் பெரிய தொகையை மிச்சப்படுத்தி, முதலீடு செய்து செல்வம் சேர்க்க முடியும். 3 பிராண்ட்டு பொருள்களுக்காக அதிகமாக செலவிடுதல்..! நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆடைகள், ஷீக்கள், பெல்ட்கள், நாம் முடிவெட்டும் சலூன்கள், பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை பிராண்டு ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். போதிய பண வசதி இல்லை என்றாலும் ஐபோன், ஆப்பிள் லேப்டாப் என பெரிய பிராண்டடு பொருள்களை தகுதிக்கு மீறிய அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கம் நம்மவர்கள் இடையே வந்திருக்கிறது. இப்படி செய்வதால் முதலீட்டுக்கான தொகை குறைந்து செல்வம் சேர்வது, நிதி இலக்குகள் நிறைவேறுவது தடைபடுகிறது. 4 சுற்றுலாவுக்காக அதிக செலவு..! சமீப காலமாக மக்களிடையே பரவி வரும் மற்றொரு விஷயம், சுற்றுலா செல்வதற்காக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில், தபால் அலுவலகம் மற்றும் வங்கி ஆர்.டிகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குழந்தையின்  உயர் கல்வி, மருத்துவ செலவு,  கார், சொந்த வீடு  போன்றவற்றுக்காக தனித் தனியாக எஸ்.ஐ.பி  முறையில் முதலீடு செய்து வருபவர்கள், தற்போதைய காலக் கட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காக குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி  முறையில் தங்கள் வருமானத்தில் சிறு தொகையை முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக 25 – 35 வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறையினர், கண்டிப்பாக  சர்வதே சுற்றுலா அல்லது வேறு எங்கேனும் செல்ல வேண்டும் என அதிக செலவு செய்கின்றனர். இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான் என்றாலும் கூட, சுற்றுலாவுக்காக அதிக அளவு செலவு செய்வது என்பது தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று. சுற்றுலாவுக்காக ஆண்டு தோறும் அதிக தொகையை செலவு செய்து வந்தால், முதலீட்டுக்கு பணம் மிச்சமாகாது. சம்பளத்தில் சுமார் 3-5 சதவிகித தொகையைதான் சுற்றுலாவுக்காக செலவிட வேண்டும்.   5 பெரிய பள்ளிக்கூடம், கல்லூரி இன்றைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அங்கு தான் தரமான கல்வி கிடைக்கிறது. அங்கு படித்தால்தான்  குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார்கள்.  பொதுவாக சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒருவர் படிக்க ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாயாவது கட்டணம் என்பது இருக்கும். ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் என்றால் 3 லட்சம் ரூபாய் செலவாகும். இது நடுத்தர குடும்பத்திற்கு மிகப் பெரிய செலவு ஆகும். வருடத்திற்கு 45 – 50 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள்  எனில், இதில் 3 லட்சம் ரூபாயை பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுவது என்பது பெரிய பிரச்னையாக இருக்காது. இதுவே 10-12 லட்சம் ரூபாய் மட்டுமே வருடத்திற்கு சம்பாதிக்கும்  நடுத்தர குடும்பத்திற்கு, இது மிகப் பெரிய செலவு ஆகும். குறைந்த கட்டணத்தில் சிறப்பான கல்வியை கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் ஏராளம் உண்டு.  அவற்றை தேர்வு செய்து, அங்கு  குழந்தைகளை படிக்க வைக்கலாம். ஒரு வேளை ஒரு சில வருடங்கள் கழித்து உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது அப்போது பெரிய பள்ளிக் கூடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் வருமானம் குறைவாக இருக்கும் போது, ஆரம்பத்தில் இருந்தே சி.பி.எஸ்.இ பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். குழந்தைகளின் கல்வி செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 6 திருமணத்திற்கு அதிக செலவிடுதல் ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒன்று. இதனால் பலரும் தடபுடலாக திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். அதிலும் திருமணம் என்றாலே பிரைடல் மேக்கப் என்கிற மணமகள் அலங்காரம் என்பது மிகப் பெரிய டிரெண்டாகி வருகிறது. இதற்கு மட்டும் சில லட்சங்கள் செலவு செய்யும் குடும்பங்கள் ஏராளம். இதேபோல், வீடியோ, புகைப்படம் என லட்சக்கணக்கில் செய்யும் குடும்பங்கள் மிக அதிகம்.    சிறுக சிறுக சேமித்து வைத்த பெரும்பாலான சேமிப்புகளை இப்படிபட்ட ஆடம்பர செலவுகளிலேயே பலரும் பணத்தை கரைத்து விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் அதையும் தாண்டி கடன் வாங்கிச் செலவு செய்கின்றனர். கடன் வாங்கி திருமணச் செலவுகளை மேற்கொள்வதை தவிர்க்கலாம். மாறாக இதுபோன்ற அனாவசிய செலவுகளை தவிர்த்து, அதை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கலாம்.  7  கிரெடிட் கார்டு பயன்பாடு இன்றும் பலர் அடுத்த மாத சம்பளத்தில் தான் தற்போதைய மாத செலவுகளை செய்து கொண்டிருப்பர். சிலருக்கு மாத கடைசியில் கை கொடுப்பது கிரெடிட் கார்டுகள் தான். இன்னும் சிலர்  ஓட்டல், கிளப், சினிமா, சுற்றுலா என ஜாலியாக கிரெடிட் கார்டு மூலம் இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள்.  அடுத்த மாதம் சம்பளத்தில் அதை கட்டிக் கொள்ளலாம் என கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.   இது மிக மோசமான ஒரு பழக்கம். நமது தாத்தா, பாட்டி அல்லது அம்மாவிடம் ஏதேனும் அவசர தேவைக்காக பணம் கேட்டால், தாங்கள் சேமித்து வைத்த தொகையை பல இடங்களில் இருந்து எடுத்து வந்து தருவர்.  ஆனால், இன்றைய சூழல் அப்படி இல்லை. மாறாக கடன் வாங்கியும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலவு செய்கிறோம். ஆக இதுபோன்ற மோசமான பழக்கங்களை தவிர்த்தாலே நம்மிடம் பெரிய தொகை என்பது மிச்சமாகும். அதனை முதலீடு செய்யும் போது செல்வம் சேரும்.   பார்ட்டிகள் பலரும் செய்யும் தவறுகளில் ஒன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் உள்ளிட்ட சில தினங்களுக்கு அதிக செலவு செய்வதாகும்.  குழந்தையின்முதல் பிறந்த நாள். 10-வது திருமண நாள் என நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் பெரிய ஓட்டல் அல்லது பொழுதுபோக்கு விடுதிகளுக்கு கூட்டிச் சென்று லட்சக்கணக்கான ரூபாயை கண் மூடித்தனமாக செலவு செய்கிறார்கள். இது மிக மோசமான தவறுகளில் ஒன்று. குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக  1 வயதில் 1 லட்சம் ரூபாய் செலவு செய்வதற்கு பதில், அதே தொகையில் நகையாக, தங்க நாணயமாக வாங்கி வைக்கலாம்; நல்ல நிறுவனப் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.   இதன் மதிப்பு என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும். மேலே கூறப்பட்ட தவறுகளை தவிர்த்தாலே முதலீடு செய்ய அதிக தொகை கிடைக்கும். அது செல்வத்தை உருவாக்கவும் பெருக்கவும் செய்யும்.  #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

கண்டிப்பாக இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள்:   உங்கள் செல்வத்தின்மதிப்பு அதிகரிக்க சூப்பர்  டிப்ஸ்! Read More »

6 key mindsets for financial success and wealth building.

கோடிகளில்பணம் சம்பாதிக்க 6 முக்கிய   மனநிலைகள்..  உங்களிடம் இருக்கா?

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கும். அது ஏழையாக இருந்தாலும் சரி,கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பணத்திற்காகத் தான் வேலை செய்கிறோம். எனினும்பணக்காரர்கள் பணத்தின் பின்னால் ஓடுவதில்லை. ஆனால் அவர்கள் அதை முன்கூட்டியே திட்டமிட்டுஅதை அடைய வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகின்றனர். அவர்கள் விரும்பியதை அடைய சுதந்திரமாக செயல்படுகின்றனர். அந்த மனநிலையை வளர்த்துக் கொள்வதால் தான், அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். ஆக நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும், கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில்,   ஆறு குறிப்பிடத்தக்க தகுதிகளை உங்களுக்குள் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மன நிலை சிறப்பானதாக இருந்தால், அதுவே உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். அப்படி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 1 வெற்றிதான் முதல் இலக்கு நாம் எதை எடுத்துக்கொண்டாலும் வெற்றி என்பது இரு முறை நிகழும். முதல் வெற்றி மனதளவில் நடக்கும், இரண்டாவது வெற்றி நடைமுறையில் நடக்கும்.   பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு தொழிலை செய்வதில்லை. மாறாக அதில் சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான்  செயல்படுகிறார்கள். உதாரணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டும், விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ வேண்டும் என நினைத்தால்,இந்தியாவின் சிறந்த தொழிலதிபர் ஆன முகேஷ் அம்பானி ஆயுள் முழுக்க அவர் சம்பாதித்த சொத்துகளைசெலவு செய்தால் கூட, அவரால் அவரின் சொத்துகளை செலவழிக்க முடியாது. ஆனாலும் கூட இன்று வரையில்புதிய புதிய வணிகங்களை தொடங்குகிறார். முதலீடு செய்கிறார் எனில், ஏன்? ஏனெனில் அவர்வெற்றி என்ற இலக்கை அடைய துடிக்கிறார். அந்த மனநிலையில் தான் இருக்கிறார். அதுவே அவரின் பணம் மேலும் வளர உதவிகரமாக இருக்கிறது. ஆக இந்த வெற்றி மனநிலையை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பணத்தின் பின்னால் ஓடாமல், வெற்றியை நோக்கி பயணிக்கும் போது அதுவே நம் இலக்கை அடைய உதவிகரமாக இருக்கும்.  2  பிறரை கவர பந்தா வேண்டாம் இரண்டாவது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் நிகர சொத்து மதிப்பு என்கிற  நெட்வொர்த் ஆகும்.  ஒரு பணக்காரருக்கும் (Rich Man), செல்வந்தருக்கும் (Wealthy man) இடையில் உள்ள விஷயங்களை கவனித்து பாருங்கள், ஒரு பணக்காரர் மிக ஆடம்பரமாக கையில் தங்க கடிகாரம், தங்க ஆபரணம், விலை உயர்ந்த சொகுசு பென்ஸ் கார் என வைத்திருப்பார். ஆனால் அதை சரியாக பராமரிப்பதற்கு செலவிட வேண்டிய தொகை என்பது, எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். ஏனெனில் பென்ஸ் காரின் இன்ஷூரன்ஸ், மற்ற பராமரிப்பு செலவுகள் என்பது மிக அதிகம். எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் மொத்த சொத்தின் மதிப்பை கணக்கிட்டால், செல்வந்தரை காட்டிலும் குறைவாகவே இருக்கும். ஆனாலும் சமுதாயத்தில் தங்களை முன்னிலைப் படுத்தி கொள்ள இத்தனையும் செய்வார்கள். இன்னும் இதை தெளிவாக நடைமுறை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பந்தா பேர்வழிகளாக இருப்பர். ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு வீழ்ச்சியை சந்திக்கிறார்கள் என்றால் அவ்வளவு தான். அதோடுஅவர்களின் சொத்து மதிப்பு தரைமட்டத்திற்கு சென்றுவிடும். அதிலிருந்து அவர்களால் மீள முடியாது. இதே ஒரு செல்வந்தரை பார்த்தால் மிக எளிமையாக இருப்பார். அவரும் பென்ஸ் கார் வைத்திருப்பார். ஆனாலும் அவர் அதை பராமரிப்பது எளிது. அவரின் வணிக தேவைக்காக அதை வாங்கியிருப்பார்.அவரின் சொத்து மதிப்பும் பணக்காரர்களை காட்டிலும் அதிகம் இருக்கும். அவர்கள் ஆடம்பரத்தை விடுத்து, தங்கள் நெட்வொர்த்தை எப்படி அதிகப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவார்கள். ஆக இதெல்லாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.  3. பணம் இருப்பதை வெளியில் காட்டாதீர்கள்..! பணம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள். பொதுவாக, நடுத்தர  மக்கள் பலரும் தங்களை எப்போதும் பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக்கொள்ள நினைப்பார்கள். அதற்காக பணக்காரர்கள் பயன்படுத்துவதை போல் விலை உயர்ந்த கார்,  ஸ்மார்ட் போன் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி குவிப்பர்.  தங்களிடமும் பணம் இருக்கிறது என்பதை இதன் மூலம் காட்டிக் கொள்வர். பணக்காரர்கள் போல ஆடம்பரமாக வாழ நினைப்பார்கள். அதற்காக கடன் வாங்கி விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பது இன்னொரு துரதிர்ஷ்டவசமான விஷயம்.  இது மிகப்பெரிய தவறு ஆகும். அதை  ஒருபோதும் நீங்கள்  செய்யாதீர்கள். உங்களிடம் இருக்கும் பணத்தை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளாதீர்கள்.  ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துள்ளீர்களா? வங்கியில் பணம் வைத்திருக்கிறீர்களா? மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறீர்களா? விலை உயர்ந்த கார் வாங்கியிருக்கிறீர்களா?    அதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்.  ஆனால் மற்றவர்கள் இடத்தில் பகிராதீர்கள். அதை விடுத்து பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக் கொள்ள எதையும் செய்யாதீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ பழங்குங்கள். அதை விடுத்து கடனை வாங்கி செலவு செய்து அஸ்தஸ்தை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், அது உங்களை மேலும் சரிவுக்கே கொண்டு செல்லும். இது உங்களை எப்போதும் வளர விடாது. ஆக இந்த மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். 4 நீண்ட கால அடிப்படையில் யோசித்தல்..! பலரும் நினைப்பது குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும். உதாரணத்திற்கு மிக குறைந்த விலையில் இருக்கும் பென்னி பங்குகளை வாங்கிக் கொண்டு, அது ஒரே வருடத்தில் பத்து மடங்கு அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்க வேண்டும்எ ன்று நினைக்கிறார்கள். 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்துவிட்டு, 10% வருமானம் கிடைத்து, 11 லட்சம் ரூபாயாக எதிர்பார்த்தால் தவறில்லை. ஆனால் 10 லட்சம் ரூபாய் 10 கோடி ரூபாயாக அதிகரிக்கும்? என்று எதிர்பார்ப்பது தான் மிகப்பெரிய தவறு. 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு 15% வருமானம் கிடைக்கிறது எனில், 50 வருடத்தில் உங்கள் முதலீடு 100 கோடி ரூபாய் என்ற இலக்கை அடைந்திருக்கும். ஆனால் இப்படி யாரேனும் நீண்டகால அடிப்படையில் யோசிக்கிறோமா? என்றால் நிச்சயம் இல்லை. ஆக நீண்ட கால அடிப்படையில் உங்கள் இலக்குகளை உயர்ந்ததாக வைத்திருங்கள். அது உங்கள் பணம் வளர உதவிகரமாக இருக்கும். 40 வயதான ஒருவர் இப்போது 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, 50 வருடம் காத்திருந்தால், 90 வயதில் 100 கோடி ரூபாய் கிடைத்து என்ன பலன் என்ற கேள்வியும் எழலாம்.   ஆக இந்த வயதில் உங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள். 50 ஆண்டுகள் என்பதை விடுத்து, 10, 15 ஆண்டுகளில் என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள். ஆக நீண்ட கால அடிப்படையில் திட்டமிடல் என்பது மிக மிக அவசியமான ஒன்று. 5  ரிஸ்கை கணக்கிடுதல் பலரும் பங்குச் சந்தை என்றால் அது சூதாட்டம். மியூச்சுவல் ஃபண்ட் என்றால் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் முதலீடு ஆகும். அவற்றை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என பலரும் விலகியே இருக்கிறார்கள். என்னால் எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது என கூறுவர். ஆனால் இது  மிக தவறானது. மாறாக வணிகமோ அல்லது முதலீடோ அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு  அதில் ஈடுபடலாம்.. இது வெற்றி பாதைக்கு கூட்டி செல்லும்.அதை விடுத்து எந்த முயற்சியும் செய்யாமல் வணிகம் என்றாலே நஷ்டம். பங்கு சந்தை என்றாலே சூதாட்டம் என்ற மன நிலை இருந்தால், அதில் வெற்றி பெறுவதும் கடினம். இதுவே  செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம் எனலாம். ஆக பிரச்னைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது புத்திசாலிதனமான ஒன்றாக இருக்கும்.  6 தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்..! செல்வந்தர் ஆக தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்; புதிதாக கற்றுக் கொண்டே இருங்கள். அது உங்களை அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துசெல்லும். கற்றுக் கொள்வதோடு விட்டுவிடாமல் அதை செயலிலும் சரியாக செயல்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு பலரும் பலவிதமான வணிக திட்டங்களை கூறுவார்கள். இதை செய்தால் அவ்வளவு லாபம் கிடைக்கும். இது இவ்வளவு லாபம் கிடைக்கும். இது சூப்பரான பிசினஸ் என கூறுவார்கள்.இதை அவரிடத்தில் கேட்டு செய்த நண்பர்கள் கூட அதை வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கிவிடுவார்கள். ஆனால் வணிகம் பற்றி பேசியவர் பேசிக் கொண்டுதான் இருப்பார். இந்த மன நிலையை உடனே மாற்றிக்கொள்ளுங்கள். அதுவே உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். கற்றுக் கொண்டதை செயல்படுத்த தொடங்குங்கள். இந்த ஆறு மனநிலைகளை ஒருவர் கொண்டிருந்தாலே, அவர் கோடீஸ்வரர் ஆவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார் என்று அர்த்தம். மேலும், பணத்தை பெருக்க கற்றுக் கொண்டுள்ளார் எனலாம். #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

கோடிகளில்பணம் சம்பாதிக்க 6 முக்கிய   மனநிலைகள்..  உங்களிடம் இருக்கா? Read More »

Financial planning for people over 40 to build wealth

பணி ஓய்வுக் காலம்: 40 வயதுக்கு பிறகு கோடிகள் சேர்ப்பது எப்படி?

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ எல்லோருக்குமே இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசை,  இளம் வயதில் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது நிம்மதியாக, நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க வேண்டும்: அதற்கென ஒரு நிதியை சேமிக்க வேண்டும். அதன் மூலம் சம்பளம் போல மாதா மாதம் ஒரு தொகை கணிசமாக கிடைக்க வேண்டும். அதை வைத்து வாழ்வின் முதுமை காலத்தில்  நிதிச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என நினைப்பர். ஆனால் இதை எத்தனை பேர் சாத்தியமாக்கிக் கொள்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.   பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு..! பெரும்பாலும் நன்றாக சம்பாதிக்கும் காலத்தில் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்;  இன்னும் சில ஆண்டுகள் போகட்டும்; இன்னும் வருடங்கள் இருக்கின்றன என பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்வதை தவற விட்டு விடுவார்கள். ஆனால் முதுமை காலத்தில் ஓய்வெடுக்க முடியாமல் வேலைக்கு சென்று அல்லல்படுவதை பல குடும்பங்களில் பார்க்க முடிகிறது.  இப்படி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் எனில்,  உடனடியாக ஓய்வுக் காலம் பற்றிய சரியான திட்டமிடுதலை  மேற்கொள்ளுங்கள். . நம்மில் பெரும்பாலோர் சுமார் 40 வயது வாக்கில்தான் பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்வது பற்றி யோசிக்கிறார்கள். 40 வயதான ஒருவர் தன்னுடைய ஓய்வுக் காலத்திற்கு தேவையான தொகையை எப்படி சேமிப்பது? 40 வயதிற்கு பிறகு கோடிக்கணக்கான ரூபாயை சேர்ப்பது  என்பது சாத்தியமானதா? இதை எப்படி  நடைமுறைப்படுத்துவது? சரியான திட்டமிடல் அவசியம்…! பலரின் வாழ்க்கையில் நடுத்தர காலகட்டத்தில், ஏதேனும் எதிர்பாராத காரணங்களால் சம்பாதித்த முழு தொகையும் இழந்திருக்கலாம். அது விபத்தாக இருக்கலாம். நண்பர்களுக்கு கடன் கொடுத்து திரும்ப வாங்க முடியாமல் இருந்திருக்கலாம். சீட்டு போட்டு பணத்தை திரும்ப பெற முடியாமல் இருக்கலாம். ஏதேனும் ஒரு காரணத்தால் முழுப் பணத்தையும் இழந்து, வங்கி கணக்கில் பூஜ்ஜிய இருப்பு இருக்கலாம். இதற்கு மேல் நான் எங்கே கோடி கணக்கில் சேர்ப்பது? முதலீடு செய்வது எப்படி?  40 வயதிற்கு மேல் ஓய்வுக் காலத்துக்கு போதுமான நிதியை சேர்க்க வேண்டும் என்பவர்கள், சரியான திட்டமிடலை செய்தாலே போதும். போதிய நிதியை சேர்க்க முடியும். உண்மையில் யார் பணக்காரர்? இந்தத் திட்டமிடலுக்கு முன்பு சரியான சொத்து என்பது எது? என புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு 60 வயதான மகேஷ் 3 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டுகள் வீடு வைத்துள்ளார். இதில் ஒரு வீட்டில் அவர் குடியிருக்கிறார். மற்றொரு வீட்டை மாதம் 30,000 ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளார். இதே சுரேஷ்  3 கோடி ரூபாயை ஃபைனான்சியல் அசெட் (ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள்) ஆக வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் அவருக்கு வருமானம் மட்டும் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. இதனால் அவரிடத்தில் பணப்புழக்கம் என்பது அதிகம். சுரேஷ் பெரிய வீட்டில் ரூ.30,000-க்கு வாடகைக்கு இருக்கிறார். இவர்கள் இருவரில் யார் பணக்காரர் எனில் சுரேஷ் தான். ஏனெனில் அவரிடம் போதிய பணப்புழக்கம் என்பது உள்ளது. மகேஷிடம் வீடுகள் இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது மிகக் குறைவு தான். பொதுவாக தங்களிடம் இருக்கும் தொகையை பலரும் இழப்பதற்கு காரணம் பெரிய மருத்துவ செலவுகளாகத் தான் இருக்கும். இதனால் தான் மொத்த சேமிப்பு மற்றும் முதலீடுகளையும் இழந்திருக்கலாம்.  எந்தப் பெரிய மருத்துவ செலவு வந்தாலும்,  அதனை சமாளிக்க பலரும் யாராக இருக்கிறீர்களா? என்றால் நிச்சயம்  இல்லை என்று தான் கூற வேண்டும். ஆக முதலில்  ஒருவர் அவருக்கும்  குடும்பத்தினருக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீடு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு எடுக்க வேண்டும். இது எதிர்பாராத தருணங்களில் ஏற்படும் பெரிய மருத்துவ செலவுகளில் இருந்து அவரையும் குடும்பத்தினரையும் காப்பாற்றும்; கூடவே அவரின் சேமிப்பு, முதலீடு, சொத்துகளையும் காப்பாற்றும்; கடனில் சிக்குவதிலிருந்தும் காப்பாற்றும். அதேபோல ஒருவர் வாங்கும் சம்பளத்தை போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். அது  குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் இந்த உலகில் இல்லாவிட்டாலும், நிதி ரீதியாக குடும்பத்தினருக்கு பாதுகாப்பை கொடுக்கும்.  அதிக தொகைக்கு இந்த பாலிசியை எடுத்திருக்கும் போது, வருமானம் ஈட்டும் நபருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்தினர் நிதி ரீதியாக எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ள மாட்டார்கள். முதலீட்டில் கவனச் சிதறல்கள் வேண்டாம்..! பொதுவாக ஒருவரிடம் கையில்  அதிக பணம் இருக்கிறது; அதிகம் சம்பளம் வாங்குகிறார், அதிகம் சம்பாதிக்கிறார் என தெரிந்தால் சுற்றியுள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஒவ்வொருவரும் ஒரு ஐடியா கொடுப்பார்கள். . ஊட்டி, கொடைக்கானல், கோயம்புத்தூரில் வீடு வாங்கலாமா? சொந்த ஊரில் வீடு வாங்கலாமா? சொகுசு கார் வாங்கலாமா? இப்படி பல வகையிலும் கவனச்சிதறல் என்பது ஏற்படும். பிறர்  சொல்வது, நினைப்பது எல்லாம் சரியான முதலீடா? அதன் தேவை என்ன?, அதன் மூலமான வருமானம் எப்படி என முழுமையாக தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்யக் கூடாது. அதை சரியான முறையில் அலசி ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்வது என்பது சரியான திட்டமிடலாக இருக்கும். சரியான முதலீட்டு திட்டங்கள்..! பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பது இந்த விஷயத்தில் தான். சம்பாதித்த பணத்தை யாரோ  இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் கூறினார் என கண்னை மூடிக் கொண்டு சேமிப்பு மற்றும் காப்பீடு கலந்த எண்டோமென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கி விடுவர்.  இதுபோன்ற பாரம்பரிய காப்பீட்டுத் திட்டங்களில் குறைவான காப்பீட்டு கவரேஜ் போக நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 5% வருமானம் மட்டுமே கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் பணவீக்கம் என்பதே 6 – 7% ஆக இருக்கிறது. ஆக பாலிசி மூலம் வெறும் 5% வருமானம் கிடைக்கிறது எனில், அதனால் பெரிய பயன் இல்லை. குறைந்தபட்சம் உங்கள் முதலீட்டின் மூலம்  ஆண்டுக்கு 12 சதவிகிதமாவது வருமானம் கிடைக்க வேண்டும்.  ஒரு சிலர் வருமானம் குறைவாக இருக்கும் திட்டங்களில் கண்ணை மூடிக் கொண்டு முதலீடு செய்கிறார்கள் எனில், மறுபுறம் பலரும் அதிக வருமானம் கிடைக்கும் என யாரோ கூறியதை கேட்டு கிரிப்டோகரன்சி, ஷேர் டிரேடிங், கமாடிட்டி டிரேடிங் போன்ற திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அவை பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் போட்டப்  பணத்தை இழக்கிறார்கள். இன்னும் சிலர் ஆண்டுக்கு 30%,40%, 50% என அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு பொன்சி திட்டங்களில் பணத்தை போட்டு மொத்தப் பணத்தையும் இழக்கிறார்கள். மேற்கண்ட திட்டங்களை தவிர்த்து, நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாகும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில், ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12–14% வருமானம்  கிடைக்கலாம். இந்தியாவின் அடுத்த பொருளாதார வளர்ச்சி  இன்னும் 15, 20 ஆண்டுகளுக்கு சிறப்பான  இருப்பதால், நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளாக தேர்வு செய்து முதலீடு செய்தால்  ஆண்டுக்கு 12- 14% வருமானம் என்பது சாத்தியம் தான். எஸ்.ஐ.பி மற்றும் ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி பொதுவாக முதலீடு செய்யும் முன்பு சரியான முறையில் கணக்கீடு செய்து, தேவைக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 40 வயதில் ஒருவரின் சம்பளம், வருமானம் என்பது நிச்சயம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது  மாதச் சம்பளம், வருமானம் ரூ.80,000, ரூ.1 லட்சம் என்பது போல் இருக்கும். அதனால், மாதம் 30,000 ரூபாய் முதலீடு என்பதை எளிதாக பலரும் செய்ய முடியும்.  இதை  அவரின் பணி ஓய்வு வயதான 60 வரை, அதாவது  20 ஆண்டுகளுக்கு தொடரும்பட்சத்தில்,  ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்கும், நல்ல பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் போது, நிச்சயம் 2.99 கோடி ரூபாய் தொகுப்பு நிதியை அடைய முடியும். இந்த அளவுக்கு அதிக தொகையை முதலீடு செய்ய இயலவில்லை என்றால், மாதம் ரூ.25,000 அல்லது ரூ.20,000 முதலீடு செய்யும் போது தொகுப்பு நிதி முறையே ரூ.2.5 கோடி அல்லது ரூ. 2 கோடி ஆக இருக்கும்.    ஆரம்ப முதலீட்டுத் தொகையான ரூ.30,000-ஐ வருடத்திற்கு  10% அதிகரிக்கலாம். அப்படி  அதிகரித்தால் 60 வயதில்  கார்பஸ் என்பது 5.97 கோடி ரூபாயாக இருக்கும்.  இதுவே ஆரம்ப முதலீட்டுத் தொகை மாதம் ரூ.25,000 அல்லது ரூ.20,000  ஆக இருந்து, ஆண்டுக்கு 10% அதிகரித்து முதலீடு செய்யும் போது தொகுப்பு நிதி முறையே ரூ. 4.97 கோடி அல்லது ரூ.3.98 கோடி ஆக இருக்கும்.    ஆக 40 வயதில் உங்கள் சேமிப்பு என்பது பூஜ்ஜியமாக இருந்தாலும் கூட, சரியான திட்டமிடல் இருந்தால் கோடிகளில் பணி ஓய்வுப் பெறுவது என்பது சாத்தியமானதே. இதற்கு சரியான நிதி திட்டமிடல் மற்றும் நிதி ஒழுக்கம்  இருந்தாலே எளிதில் அடைய முடியும். பாக்ஸ் தொகுப்பு நிதி நீண்டக் காலத்துக்கு வர..! தொகுப்பு நிதி மூலம் கிடைக்கும் தொகையை அந்த அந்த ஆண்டே முழுமையாக எடுத்து செலவு செய்யாமல் குறைவாக செலவு செய்தால், தொகுப்பு நிதி நீண்ட காலத்துக்கு வருவதோ, அது உயர்ந்து கொண்டே வரும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதிக தொகையை எடுத்து செலவு செய்ய முடியும். ஒருவரின் ஓய்வுக் கால தொகுப்பு நிதி ரூ.2 கோடி இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை ஆண்டுக்கு 8 சதவிகிதம் வருமானம் தரும் திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு ரூ.16 லட்சம் கிடைக்கும். அதாவது மாதம் ரூ.1.33 லட்சம் கிடைக்கும். இந்தத் தொகையை அப்படியே செலவு செய்யாமல் மாதம் ரூ.70,000, ரூ.80,000 என்பது போல் செலவு செய்தால் தொகுப்பு நிதி பெருகி வரும். சுமார் ஐந்தாண்டுகள் கழித்து மாதம் ரூ.1 லட்சம், பத்தாண்டுகள் கழித்து ரூ.1.5 லட்சம் என்பது போல் எடுத்து செலவு செய்தாலும் தொகுப்பு நிதி குறையாது.   1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

பணி ஓய்வுக் காலம்: 40 வயதுக்கு பிறகு கோடிகள் சேர்ப்பது எப்படி? Read More »

Zero at 40… ₹3.6 Crore at 55! Is This Possible?

முதலீடு 40 வயதில் வெறும் ஜீரோ..! 55 வயதில் ரூ.3.6 கோடி.. எப்படி சாத்தியம்?!

எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/சம்பளம் வாங்கிய முதல் நாள் ராஜா போல செலவு செய்யும் நம்மால், மாத கடைசியில் அப்படி இருக்க முடிவதில்லை. சொல்லப்போனால் கடன் வாங்கி செலவு செய்யும் நிலையே பலர் மத்தியில் காணப்படுகிறது. மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் தொகையை, எதற்கு எப்படி செலவு செய்தோம், எவ்வளவு சேமித்தோம், முதலீடு செய்தோம் என்றால் பலரின் பதில் ‘தெரியவில்லை’ என்பதாகத் தான் இருக்கும். ஒரு சிலர் கை நிறைய சம்பாதித்தாலும், சேமிப்புக்கு முக்கியத்துவம் எதுவும் கொடுப்பதில்லை.வரவு எட்டணா? செலவு பத்தணா? இன்றைய நிலையில் பலரின் நிலை வரவு எட்டணா? செலவு பத்தணா? என்பதாக இருக்கிறது.40 வயதான என் நண்பர் ஒருவர் மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அதாவது வருடத்திற்கு 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கையில் சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. மாத கடைசியில் அவரின் நிலைப்பாடு பூஜ்ஜியமாக தான் இருக்கிறது. அப்படி என்ன செலவு என பார்க்கையில், சென்னை இசிஆர் -ல் வாங்கிய சொகுசு வீட்டுக்கு மாத தவணை மட்டும் 1 லட்சம் ரூபாய் செலுத்துகிறார். வருடத்திற்கு அதற்கு மட்டும் 12 லட்சம் ரூபாய் செலுத்தி வருகிறார். அவர் பயன்படுத்தும் சொகுசு காருக்கு மாத தவணையாக ரூ. 60,000 அதாவது வருடத்திற்கு 7.2 லட்சம் ரூபாய் செலுத்துகிறார். குடும்பத்துடன் சர்வதேச சுற்றுலா செல்ல வருடத்திற்கு 4 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார். இது போக அவரின் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் செலவழிக்கிறார். குழந்தைகளின் கல்வி செலவாக வருடத்திற்கு 4 லட்சம் ரூபாய் செலுத்தி வருகிறார். அவரின் வருமான வரியாக சுமார் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறார். ஆக மொத்தத்தில் 48 லட்சம் ரூபாய் வருமானத்திற்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது. அவரின் நிதி நிலைப்பாட்டை எப்படி சரி செய்வது? சேமிப்பை எப்படி மேம்படுத்துவது என பார்ப்போம். படி-1: செலவை குறைத்து முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.! ஆடம்பரமான அபார்ட்மெண்ட், சொகுசு கார் என சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் வாழ்க்கை தரத்தை உடனடியாக மாற்றிக் கொள்ள முடியாது. உடனடியாக செலவுகளையும் குறைக்க முடியாது. ஆனால் மாதம் 25,000 ரூபாயை பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியும். அந்த வகையில் வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதை அவரால் சமாளிக்க முடியும். அது பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆக  அவர் குடும்பத்தோடு செல்லும் சர்வதேச சுற்றுலாவுக்கு செலவிடும் ரூ.4 லட்சம் தொகையில் குறைத்து எஸ்.ஐ.பி-ல் முதலீடு செய்ய  முடியும். அதை ஆண்டுதோறும் 10% அதிகரிக்கலாம். அப்படி செய்யும்பட்சத்தில் மேற்கண்ட எஸ்.ஐ.பி முதலீட்டை 15 ஆண்டுகள் தொடருகிறார் என வைத்துக் கொள்வோம். சராசரியாக 15% வருமானம் என கணக்கிட்டால் கூட, அவரின் தொகுப்பு நிதி 2.67 கோடி ரூபாயாக இருக்கும். பல ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20%-க்கு மேல் கூட வருமானம் கொடுத்து வருகிறது என்பதால் 15% வருமானம் என்பது சாத்தியமே எனலாம். ஆனால், அதற்கு பங்குச் சந்தையின் இறக்கம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சீராக இடை விடாமல் முதலீடு செய்து வருவது அவசியமாகும். படி -2: வீட்டு செலவு இவ்வளவா?மேற்கூறிய நண்பரின் வீட்டு செலவு மட்டும் மாதம் 75,000 ரூபாய், அதுவும் வீட்டு வாடகை என்பது இல்லாமல் எனும் போது, இது மிக அதிகம். இதை குறைக்க வீட்டு செலவுக்கு என தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் போட்டு வைக்கலாம். அத்தோடு குடும்பத்தினர் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளில் அவசர தேவைக்கு என ஒன்றை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, மற்றவைகளை நிரந்தரமாக முடித்துக் கொள்ளலாம். இது கூடுதலான அனாவசிய செலவுகளை தவிர்க்க உதவும். பயன்படுத்தும் ஒரே கார்டுக்கு வருடாந்திர கட்டணம் இல்லாமல், சலுகைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.வீட்டு கணக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து மாதம் 75,000 ரூபாய் செலவில், சுலபமாக வாரம், 3,500 ரூபாய்  மிச்சப்படுத்தலாம். இது மாதம் 14,000 ரூபாய் ஆகும். நம்மவர்களை பொறுத்த வரையில் உளவியல் ரீதியாக பார்க்கும் போது கையில் இருக்கும் காசுக்கு ஏற்ப செலவை செய்வோம். ஆக 75,000 ரூபாய் வீட்டு செலவு என்பதை, 61,000 ரூபாயாக சுருக்கிக் கொள்வதில் பிரச்னை இருக்காது. அதற்கேற்ப செலவுகளை திட்டமிட்டுக் கொள்ளலாம். மிச்சப்படுத்தும் 14,000 ரூபாயையும் ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் 15 வருடங்கள் போடுவதாக வைத்துக் கொள்வோம். இதற்கும் சராசரியாக 15% வருமானம் என கணக்கிட்டால் 15 ஆண்டுகள் கழித்து தொகுப்பு நிதியாக 93 லட்சம் ரூபாய் கிடைக்கும்.குரோர்பதி!!! படி 1 ல் ரூ.2.67 கோடி ரூபாய் தொகுப்பு நிதியும், அதனுடன் படி இரண்டில் 93 லட்சம் ரூபாய் என இரண்டையும் சேர்த்தால், மொத்த முதிர்வு தொகை 3.6 கோடி ரூபாயாகும்.  40 வயதில் பூஜ்ஜிய சேமிப்புடன் இருக்கும் நண்பர், அவரின் 55 வயதில் 3.6 கோடிக்கு அதிபதியாக முடியும். இதில் 60 லட்சம் ரூபாயை பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கீடு செய்தால் கூட, மீதம் 3 கோடி ரூபாய் இருக்கும். இன்றைய காலத்தில் நண்பரின் மாத செலவினம் 75,000 ரூபாய் என வைத்துக் கொண்டால், அவரின் 55 வயதில் 6% பணவீக்கத்தை கணக்கிட்டால், அவரின் செலவு 1.75 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்த 1.75 லட்சம் ரூபாய் என்பதை எளிதாக அவரிடம் இருக்கும் ரூ.3 கோடியை வைத்து பெற முடியும். உதாரணத்திற்கு சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் மூலம் (Inflation Adjusted SWP), ரூ.3 கோடி முதலீட்டின் மூலம் மாதம் ரூ.1.75 லட்சம் ரூபாய் பெற முடியும். 55 வயதில் ரூ.1.75 லட்சமாக இருக்கும் செலவு, 65 வயதில்  பணவீக்கம் காரணமாக  ரூ.2.95 லட்சமாக மாறலாம். இதையும் எஸ்.டபள்யூ.பி தொகையை ஆண்டுக்கு 10% உயர்த்துவதன் மூலம் சாத்தியமாக்கி கொள்ளலாம். 75 வயதில் எஸ்.டபள்யூ.பி மூலம் ரூ.5.29 லட்சம் என்பதையும் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும்.  ஒரு வேளை 85 வயது வரையில் இருக்கும்பட்சத்தில் முதலீடுகள் மூலம் மாதம் ரூ.9.48 லட்சம் வரையில் பெறலாம்.   ஆக 40 வயது வரையில் கூட சேமிக்காமல் இருந்தாலும், அதன் பிறகு சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால் கூட மிகப்பெரிய இலக்குகளை எளிதில் அடைய முடியும். குறிப்பாக உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் தேவைக்கும் (Want), அவசிய தேவைக்குமான (Need) வித்தியாசத்தை உணர்ந்து கொண்டாலே பிரச்னையை எளிதாக கையாள முடியும். செலவுகளை குறைத்து, முதலீட்டை அதிகரிக்க முடியும்.குறைந்த முதலீட்டிலும் கோடி..! இங்கே நாம் அதிக சம்பளம் வாங்கும் நண்பர் எப்படி செலவை குறைத்து கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதை பார்த்தோம். இதேபோல் குறைந்த வருமானம் கொண்டவர்களும் தேவையில்லாத செலவுகளை குறைத்து. ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவது மூலம் கோடீஸ்வரர் ஆக பணி ஓய்வு பெற முடியும். உதாரணத்துக்கு 40 வயதில் மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் வாங்கும் ஒருவர் மாதம் ரூ.15,000 எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டை அடுத்து வரும் ஆண்டுகளில் சம்பள உயர்வுக்கு ஏற்ப 3 சதவிகிதம் அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால் 48.37 லட்ச ரூபாய் முதலீடு என்பது ரூ. 2.39 கோடியாக அதிகரித்திருக்கும். இதுவே மாதம் ரூ. 10,000 முதலீட்டை ஆரம்பித்து ஆண்டுக்கு 3% அதிகரித்து வந்தால் 20 ஆண்டுகளில் ரூ. 1.56 கோடி சேர்க்க முடியும். எனவே, 40,45 வயதாகி விட்டதே பணம் எதுவும் சேமிக்கவில்லையை என கவலைப்படுவதை விட்டு விட்டு களத்தில் இறங்குங்கள்..! #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

முதலீடு 40 வயதில் வெறும் ஜீரோ..! 55 வயதில் ரூ.3.6 கோடி.. எப்படி சாத்தியம்?! Read More »

8 simple steps to achieve your goal of earning ₹1 crore with practical strategies for success.

ரூ. 1 கோடிஇலக்கு: இலக்கைஅடையஎளிய 8 படிகள்..!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ தொலைக்காட்சி வரலாற்றில் ‘கௌன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட்டான நிகழ்ச்சியாகும். நிறைய தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் வந்திருக்கிறது. ஆனால், இந்த ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆவதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் ஒரு பெரிய தொகையை வெற்றியாளருக்கு பரிசாக அளிப்பார்கள். 5 கோடி ரூபாய் வரைக்கும் பரிசளிப்பார்கள். ஒரு கோடி, இரண்டு கோடி என்பது எல்லோரின் கனவாக இருக்கும். ஆனால் எல்லோராலும் அந்த நிகழ்ச்சிக்கு சென்று ஒரு கோடி ரூபாய் வெல்வது சாத்தியமற்றது. யாராவது ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.ரூ. 1 கோடி இலக்கு…! வாழ்க்கையில், நீங்கள் ஒரு ஒரு கோடி ரூபாய் சேர்க்க வேண்டும் என்றால், கீழ்க்காணும் எட்டு படிகளை பின்பற்றினால் போதும். ஒரு கோடி ரூபாயை நிச்சயம் உங்களால் அடைய முடியும். படி 1:  முதலில் சேமிப்பு, பிறகு செலவுகள்..! நமக்கு சம்பளம் வரும்போது, செலவுகளை செய்கிறோம். 25,000 ரூபாய் சம்பளத்தில், 23,000 ரூபாய் செலவு செய்கிறோம்.. மீதி ரூ.2000. (வருமானம் – செலவுகள் = சேமிப்பு) – இதைத்தான் நாம் சேமிக்கிறோம். இப்படி செய்வது தவறாகும். இதற்கு பதில், வருமானம் – சேமிப்பு = செலவுகள் இப்படித்தான் நாம் தொடங்க வேண்டும். வருமானம் எப்படி முன்கூட்டியே நிலையானதாக இருக்கிறதோ, அப்படியை சேமிப்பையும், செலவுகளையும் நிலையானதாக முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.வழக்கமான, உங்களின் வருமானத்தில் 60 சதவிகிதம் வீட்டுச் செலவுகள் ஆகும். 20 சதவிகிதம் நீண்ட கால முதலீடு, 20 சதவிகிதம் குறுகிய கால சேமிப்பு. இப்படி ஒரு கணக்கு வைத்துக் கொள்ளலாம். இப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளீர்கள் என்றால், 80% வீட்டுச் செலவுகள் என்றும், 10 % நீண்ட கால சேமிப்புக்கும், 10% குறுகிய கால சேமிப்புக்கும் ஒதுக்கிவிடலாம். ஆனால், இப்படி ஏதோவொரு விகிதத்தை முன்கூட்டியே தீர்மானித்து விட வேண்டும். உதாரணமாக, ரமேஷ், மகேஷ் என்று இருவர் இருக்கிறார்கள்.  ரமேஷ் 50,000 ரூபாய் சம்பாதிக்கிறார். மகேஷ் 25,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த இருவரில் யார் பணக்காரர் என்று கேட்டால், எல்லோரும் 50000 சம்பாதிக்கும் ரமேஷ் தான் பணக்காரர் என்று சொல்வோம்.  ஆனால், ரமேஷ் 50,000 ரூபாய் சம்பாதித்தாலும், 10% அதாவது 5000 ரூபாய்தான் முதலீடு செய்கிறார். மகேஷ் 25,000 ரூபாய் சம்பாதித்தாலும், 20% அதாவது 5,000 ரூபாய் முதலீடு செய்கிறார். இந்த இருவரில் யார் பணக்காரர் என்றார் 20 % சேமிக்கும் மகேஷ் தான் பணக்காரர். ஆகையால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், சம்பளம் வரப்போகிறது என்றால், சேமிப்புக்கு எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம் என்பதை முதலிலேயே தீர்மானித்துவிடுங்கள். அதை  நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் வர வேண்டும் என்பதாக முதலீடு செய்ய வேண்டும். படி 2: வாழ்க்கையும் வாழ்க்கை முறையும்..! உங்களின் வாழ்க்கையை (Life) மேம்படுத்துங்கள். உங்களின்  வாழ்க்கைமுறையை (Lifestyle) லைஃப்ஸ்டைலை மேம்படுத்தாதீர்கள். நாம் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறு நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து வாழ்வதாகும். என் நண்பன் அந்த பிராண்டடு விலை உயர்ந்த போனை வாங்கிவிட்டான். என் நண்பன் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி விட்டான். இதுபோல நிறைய ஒப்பீடு செய்து பார்த்தல் கூடாது. பதவி, அதிகாரம், பணம், லைஃப்ஸ்டைல் போன்ற எல்லாவற்றிலும் ஒரு போட்டி மனப்பான்மை நமக்குள் வந்துவிட்டது. மற்றவர்களுடன் ஒப்பிட்டே நம்முடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம். நீங்கள் கல்லூரியில் படித்து முடிக்கும் வரைதான் எல்லோருக்கும் ஒரே கேள்வித்தாள். அங்கு, அடுத்தவர் விடைத்தாளை பார்த்து எழுதினாலும் உங்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் எல்லோருக்கும் வெவ்வேறான கேள்வித்தாள் தான். ஆகையால், மற்றவர்களை பார்த்து நீங்கள் பின் தொடர வேண்டாம். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை யோசிப்பதுதான் படி 2. படி 3: அவசர செலவுகளை சமாளிக்க தயாராக இருப்பது கோவிட் 19  வந்து போனது. வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு. இதுபோல நிறைய எதிர்பாராத இழப்புகள் வருவதற்கு  வாய்ப்பு இருக்கும். இதுபோல எதிர்பாராத செலவுகள் வரும்போது, கடனை பலரும் வாங்கித்தான் செலவு செய்கிறோம். குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதத்துக்கான செலவு தொகையையாவது  ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில், எமெர்ஜென்சி ஃபண்டாக வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமாகும். இதுதான் தனிநபர் நிதியின் (personal finance) அடிப்படையாகும். படி 4 மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு..! வாழ்க்கையில் காப்பீடு எடுப்பது மிக முக்கியமானதாகும்.நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்தக் கம்பெனி ஒரு மருத்துவக் காப்பீடு  அதிக கவரேஜ் தொகைக்கு கொடுக்கிறது என்றால், நீங்கள் தனியாக பாலிசி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் பிரச்னைகள் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். விபத்துகள் நடக்கலாம். இதுபோல நடக்கும்போது 75% பேர் கையில் இருந்துதான் பணத்தை செலவு செய்கிறார்கள். அதுவும் கடன் வாங்கிதான் செய்கிறார்கள். இதனை தவிர்க்க மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகும். ஒருவர் குடும்பத்தை வழி நடத்துபவராக இருந்தால், வாழும் போது குடும்பத்துக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விடுவார்கள். துரதிஷ்டவசமாக வருமானம் ஈட்டும் நபர் இல்லாமல் போகும் சூழ்நிலை வருகிறது. இப்போது, குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தேவைகள் சமரசமாகி விடக்கூடாது. அதற்கு, குறைவான பிரீமியத்தில் அதிக கவரெஜ் வழங்கும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தால், குடும்பத்தினரின் நிதித் தேவைகள் நிச்சயமாக பூர்த்தியாகும் எனலாம். படி 5: தெளிவான செலவு திட்டம் தேவை.! இது மிக முக்கியமானதாகும். 50% பிரச்னைகள் எப்படி தீரும் என்றால், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் தெளிவாக தெரிந்துகொண்டால் மிகப்பெரிய பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும். நீண்ட  கால முதலீட்டில் (long term) என்ன வேண்டும், குறுகிய கால (short term) முதலீட்டில் என்ன வேண்டும் என்பதை தெளிவாக பிரித்துக் கொள்ளுங்கள். குறுகிய கால முதலீடு என்பது மூன்று வருடங்களுக்குள்ளாக, மொபைல் போன், கார், சுற்றுலா போன்றவையாகும். இதற்கு வருடத்தின் செலவுகளில் 5%, 7% 10% இப்படி ஒரு தொகையை தீர்மானித்துவிட்டால், முடிவு எடுப்பது மிகவும் எளிதாகிவிடும். நம் குடும்பத்தினரிடம் சொல்லிவிடலாம். இவ்வளவுதான். இந்த தொகைக்குள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள் என்று சொல்லிவிடலாம். நீங்கள் இப்படி ஒரு தொகையை தீர்மானிக்கவில்லை என்றால், உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. தேவையில்லாமல் அதிக பணம் செலவாகக் கூடும். . அதேபோல, நீண்ட கால திட்டங்கள், ஓய்வுகால திட்டங்களில், நான் ஓய்வு பெறும்போது சொந்த வீட்டில்தான் இருப்பேன். நான் 2040-ம் வருடத்தில் ஓய்வு பெறுவேன். அப்போது முதலீடுகள் மூலம் மாதம் 2 லட்சம் ரூபாய் வருமானம் வரும். இப்படி ஒரு தெளிவு திட்டம் இருந்தது என்றால், இன்றைக்கு நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்பது தெளிவாகும். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் இன்ஜினீயரிங் படிப்பதற்கு நானே அவனுக்கு செலவு செய்வேன். ஆனால், அவன் வெளிநாட்டில் படிக்கிறேன் என்றால், கண்டிப்பாக நான் செலவு செய்ய மாட்டேன். ஸ்காலர்ஷிப் அல்லது கல்விக் கடன் வாங்கி தான் படிக்க வைப்பேன். இந்த மாதிரி முடிவை தெளிவாக எடுத்து, அவனிடமும் சொல்லிவிட்டால், அவனும் ஒரு மாற்று வழியை யோசித்து வைத்திருப்பான். ஆகையால், நீண்ட கால முதலீட்டுக்கு, எது எனக்கு வேண்டும், எதை என்னால் பண்ண முடியும், எது எனக்கு கூடுதல் செலவு என்பதை தெளிவாக நீங்கள் முடிவு எடுத்துவிட்டீர்களானால் மிகவும் நல்லது. படி 6: நமக்காக மற்றவர்களை முதலீடு செய்ய வைக்கலாம்.இந்தியாவில் இருக்கும் சிறந்த மனிதர்களை உங்களுக்காக வேலை செய்ய வைக்கலாம். அம்பானி, அதானி போன்ற நிறைய தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி உங்களுக்கு வேலை செய்வார்கள்? இதற்கு பெயர்தான்`பங்கு முதலீடு (stock investing). உங்களுடைய சேமிப்பை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் போது, பணவீக்கதை விட இரண்டு மடங்கு வருமானம் வருவதற்கு  அதிக பெரிய வாய்ப்பு இருக்கிறது. பணவீக்கம் 6-7 % என்றால் 12-14 % உங்களுக்கு வருமானம் வரும். ஆகையால், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய தொடங்குங்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு  சிறந்ததாகும். படி 7: எதை செய்யக் கூடாது என்பதில் தெளிவு…! பணத்தை கொண்டு வருமானம் ஈட்ட எதைச் செய்யக்கூடாது என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.  திரிலான தினசரி பங்கு வர்த்தகம், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன், கிரிப்டோ கரன்சி வர்த்தகம் போன்றவற்றால் பலரும் பணத்தை அதிகமாக இழக்கிறார்கள்.  பேராசை மற்றும் பயம் இந்த இரண்டும் வந்துவிட்டால், நம்முடைய பொது அறிவை இழக்கிறார்கள். எஃப்&ஓ-வில் முதலீடு செய்து, ஒரு பெரிய தொகையை சேர்த்து விட்டேன் என்று சொல்லும் யாரையாவது, தனிப்பட்ட முறையில்  தெரியுமா உங்களுக்கு?அப்படிப்பட்டவர்களை கண்ணில் பார்த்துள்ளீர்களா? யாரோ ஒருவர் டெலிகிராம் சேனலில், வாட்ஸ் அப் சேனலில் விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று, அதற்கு பின்னால் சென்று முதலீடு செய்து, மொத்த பணத்தையும் இழந்தவர்களை, பலப்பல பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆகையால், எதைச் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். படி 8: செயலில் இறங்குங்கள்..! எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், அதற்கான முயற்சியை நான் எடுக்க மாட்டேன், செயல்படுத்த மாட்டேன் என்றால், நீங்கள்தான் ஒரு பெரிய முட்டாள். ஏனென்றால், அறிவாளி, திறமையானவர் என்றால், நிறைய ஐடியாக்கள் இருந்தாலும், அதை செயல்படுத்தினால்தானே உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.  செயல்படுத்தாமல், அடுத்த மாதம் செய்யலாம்; ஆறு மாதம் கழித்து செய்யலாம் அல்லது சம்பளம் உயரும் போது செய்யலாம் என்று தள்ளிப்போட்டால் அது தவறு. 25 வயதில் வேலைக்கு சேரும் ஒருவர் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 35 ஆண்டுகளுக்கு அவரின் 60 வயது வரைக்கும் முதலீடு செய்து வந்தால், முதலீட்டுக்கு ஆண்டுக்கு 13% வருமானம் கிடைத்தால் ரூ.1 கோடிக்கு மேல் சேர்ந்துவிடும்.சீக்கிரமாக ஆரம்பித்து முதலீடு செய்ய ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானதாகும். அவசரக் கால நிதியை உருவாக்குங்கள், காப்பீடுகளை எடுங்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொண்டு செயலில் இறங்குகள்.  இந்த எட்டு படிளை  பின்பற்றுங்கள். நீங்கள் கண்டிப்பாக கோடீஸ்வரராக சீக்கிரமே ஆகலாம். Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

ரூ. 1 கோடிஇலக்கு: இலக்கைஅடையஎளிய 8 படிகள்..! Read More »

7 critical mistakes to avoid for boosting your wealth value, paired with expert tips for financial growth.

கண்டிப்பாக இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள்:   உங்கள் செல்வத்தின் மதிப்பு அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ ஒரு சரியான நிதி திட்டமிடலை உருவாக்குவது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு  அந்த நாம் செய்யும் சில தவறுகளையும் மாற்றிக் கொள்வதாகும்.  அது மிகப் பெரிய நிதி இலக்குகளை (Finance Goals) கூட எளிதில் அடைய உதவிகரமாக இருக்கும். தவறுகளை திருந்தி கொள்வது உங்கள் செல்வத்தின் (Wealth) மதிப்பை அதிகரிக்க மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். பெரும்பாலான மக்கள் இன்றைய காலகட்டத்தில் தங்கள் நிதியை சரியாக நிர்வகிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களை அறியாமலேயே சில தவறுகள் செய்கின்றனர். இது அவர்களையும் அறியாமல் அவர்களின்  செல்வத்தின்  மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தவறுகளை சரி செய்து கொண்டாலே, பணத்தை சரியாக  நிர்வகிக்க முடியும்.  பொதுவாக, பலரும் செய்யும்  ஏழு  முக்கிய தவறுகள் பற்றி பார்ப்போம். 1 சமூக அஸ்தஸ்துக்காக அதிக செலவு..! இன்றைய கால கட்டத்தில் பலரும் செய்யும் தவறுகளில் முக்கியமான ஒன்று, சமூகத்தில் தங்கள் அஸ்தஸ்து உயர்த்தி காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதாகும்.  தாங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் தொடங்கி, கார் வரையில் மிக விலை உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்; மற்றவர்கள் மதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தங்களின் நிதி தகுதிக்கு மீறி அதிக செலவு செய்கிறார்கள். இதை தவிர்த்து தங்கள் தேவை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப  வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். யாரோ  நண்பர், உறவினர்கள் விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அதிக விலை கொடுத்து நாமும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது பலரும் செய்யும் மிக முக்கியமான தவறுகளில் ஒன்று. 2 வெளி உணவுகளை தவிர்த்தல்..! இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே மிக வேகமாக பரவி வரும் ஒரு மோசமான பழக்க வழக்கங்களில் ஒன்று,பெரும்பாலும் வெளி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாகும்.சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வரும் வித விதமான உணவகங்களே  இதற்கு சாட்சி. கடையில் சாப்பிடுவது என்பது மக்களின்  அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி விட்டது எனலாம். இன்றைய நடுத்தர குடும்பங்கள் தொடங்கி,பணக்கார குடும்பங்களில் வரையில் தவிர்க்க வேண்டிய இந்த வழக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது குடும்ப செலவில் பணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்கும். உடல் நலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளியில் ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதை குறைந்துக் கொண்டாலே நம்மால் மிகப் பெரிய தொகையை மிச்சப்படுத்தி, முதலீடு செய்து செல்வம் சேர்க்க முடியும். 3 பிராண்டடு பொருள்களுக்காக அதிகமாக செலவிடுதல்..! நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆடைகள், ஷீக்கள், பெல்ட்கள், நாம் முடிவெட்டும் சலூன்கள், பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை பிராண்டு ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். போதிய பண வசதி இல்லை என்றாலும் ஐபோன், ஆப்பிள் லேப்டாப் என பெரிய பிராண்டடு பொருள்களை தகுதிக்கு மீறிய அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கம் நம்மவர்கள் இடையே வந்திருக்கிறது. இப்படி செய்வதால் முதலீட்டுக்கான தொகை குறைந்து செல்வம் சேர்வது, நிதி இலக்குகள் நிறைவேறுவது தடைபடுகிறது. 4 சுற்றுலாவுக்காக அதிக செலவு..! சமீப காலமாக மக்களிடையே பரவி வரும் மற்றொரு விஷயம், சுற்றுலா செல்வதற்காக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில், தபால் அலுவலகம் மற்றும் வங்கி ஆர்.டிகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குழந்தையின்  உயர் கல்வி, மருத்துவ செலவு,  கார், சொந்த வீடு  போன்றவற்றுக்காக தனித் தனியாக எஸ்.ஐ.பி  முறையில் முதலீடு செய்து வருபவர்கள், தற்போதைய காலக் கட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காக குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி  முறையில் தங்கள் வருமானத்தில் சிறு தொகையை முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக 25 – 35 வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறையினர், கண்டிப்பாக  சர்வதே சுற்றுலா அல்லது வேறு எங்கேனும் செல்ல வேண்டும் என அதிக செலவு செய்கின்றனர். இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான் என்றாலும் கூட, சுற்றுலாவுக்காக அதிக அளவு செலவு செய்வது என்பது தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று. சுற்றுலாவுக்காக ஆண்டு தோறும் அதிக தொகையை செலவு செய்து வந்தால், முதலீட்டுக்கு பணம் மிச்சமாகாது. சம்பளத்தில் சுமார் 3-5 சதவிகித தொகையைதான் சுற்றுலாவுக்காக செலவிட வேண்டும்.   5 பெரிய பள்ளிக்கூடம், கல்லூரி இன்றைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அங்கு தான் தரமான கல்வி கிடைக்கிறது. அங்கு படித்தால்தான்  குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார்கள்.  பொதுவாக சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒருவர் படிக்க ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாயாவது கட்டணம் என்பது இருக்கும். ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் என்றால் 3 லட்சம் ரூபாய் செலவாகும். இது நடுத்தர குடும்பத்திற்கு மிகப் பெரிய செலவு ஆகும். வருடத்திற்கு 45 – 50 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள்  எனில், இதில் 3 லட்சம் ரூபாயை பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுவது என்பது பெரிய பிரச்னையாக இருக்காது. இதுவே 10-12 லட்சம் ரூபாய் மட்டுமே வருடத்திற்கு சம்பாதிக்கும்  நடுத்தர குடும்பத்திற்கு, இது மிகப் பெரிய செலவு ஆகும். குறைந்த கட்டணத்தில் சிறப்பான கல்வியை கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் ஏராளம் உண்டு.  அவற்றை தேர்வு செய்து, அங்கு  குழந்தைகளை படிக்க வைக்கலாம். ஒரு வேளை ஒரு சில வருடங்கள் கழித்து உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது அப்போது பெரிய பள்ளிக் கூடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் வருமானம் குறைவாக இருக்கும் போது, ஆரம்பத்தில் இருந்தே சி.பி.எஸ்.இ பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். குழந்தைகளின் கல்வி செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 6 திருமணத்திற்கு அதிக செலவிடுதல் ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒன்று. இதனால் பலரும் தடபுடலாக திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். அதிலும் திருமணம் என்றாலே பிரைடல் மேக்கப் என்கிற மணமகள் அலங்காரம் என்பது மிகப் பெரிய டிரெண்டாகி வருகிறது. இதற்கு மட்டும் சில லட்சங்கள் செலவு செய்யும் குடும்பங்கள் ஏராளம். இதேபோல், வீடியோ, புகைப்படம் என லட்சக்கணக்கில் செய்யும் குடும்பங்கள் மிக அதிகம்.    சிறுக சிறுக சேமித்து வைத்த பெரும்பாலான சேமிப்புகளை இப்படிபட்ட ஆடம்பர செலவுகளிலேயே பலரும் பணத்தை கரைத்து விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் அதையும் தாண்டி கடன் வாங்கிச் செலவு செய்கின்றனர். கடன் வாங்கி திருமணச் செலவுகளை மேற்கொள்வதை தவிர்க்கலாம். மாறாக இதுபோன்ற அனாவசிய செலவுகளை தவிர்த்து, அதை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கலாம்.  7  கிரெடிட் கார்டு பயன்பாடு இன்றும் பலர் அடுத்த மாத சம்பளத்தில் தான் தற்போதைய மாத செலவுகளை செய்து கொண்டிருப்பர். சிலருக்கு மாத கடைசியில் கை கொடுப்பது கிரெடிட் கார்டுகள் தான். இன்னும் சிலர்  ஓட்டல், கிளப், சினிமா, சுற்றுலா என ஜாலியாக கிரெடிட் கார்டு மூலம் இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள்.  அடுத்த மாதம் சம்பளத்தில் அதை கட்டிக் கொள்ளலாம் என கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.   இது மிக மோசமான ஒரு பழக்கம். நமது தாத்தா, பாட்டி அல்லது அம்மாவிடம் ஏதேனும் அவசர தேவைக்காக பணம் கேட்டால், தாங்கள் சேமித்து வைத்த தொகையை பல இடங்களில் இருந்து எடுத்து வந்து தருவர்.  ஆனால், இன்றைய சூழல் அப்படி இல்லை. மாறாக கடன் வாங்கியும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலவு செய்கிறோம். ஆக இதுபோன்ற மோசமான பழக்கங்களை தவிர்த்தாலே நம்மிடம் பெரிய தொகை என்பது மிச்சமாகும். அதனை முதலீடு செய்யும் போது செல்வம் சேரும்.   பார்ட்டிகள் பலரும் செய்யும் தவறுகளில் ஒன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் உள்ளிட்ட சில தினங்களுக்கு அதிக செலவு செய்வதாகும்.  குழந்தையின்முதல் பிறந்த நாள். 10-வது திருமண நாள் என நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் பெரிய ஓட்டல் அல்லது பொழுதுபோக்கு விடுதிகளுக்கு கூட்டிச் சென்று லட்சக்கணக்கான ரூபாயை கண் மூடித்தனமாக செலவு செய்கிறார்கள். இது மிக மோசமான தவறுகளில் ஒன்று. குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக  1 வயதில் 1 லட்சம் ரூபாய் செலவு செய்வதற்கு பதில், அதே தொகையில் நகையாக, தங்க நாணயமாக வாங்கி வைக்கலாம்; நல்ல நிறுவனப் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.   இதன் மதிப்பு என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும். மேலே கூறப்பட்ட தவறுகளை தவிர்த்தாலே முதலீடு செய்ய அதிக தொகை கிடைக்கும். அது செல்வத்தை உருவாக்கவும் பெருக்கவும் செய்யும்.  Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

கண்டிப்பாக இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள்:   உங்கள் செல்வத்தின் மதிப்பு அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்! Read More »

Scroll to Top
×